தேரிகாட்டு ஜமீன்தார் வரலாறு நூல் அறிமுக விழா திருநெல்வேலி தெட்சணமாற நாடார் சங்க அலுவலகத்தில் வைத்து நடந்தது.
முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய நூல் தேரிக்காட்டு ஜமீன்தார் வரலாறு. இந்த நூல் இ தமிழ் இந்து, தமிழ் திசை பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. இந்த நூலில் மறைந்து போன ஜமீன்தார்கள் என தேரிக்காட்டில் வாழ்ந்து மறைந்த சாத்தான்குளம், நட்டாத்தி ஜமீன்தார்கள் வரலாற்றை எழுத்தாளர் எழுதியுள்ளார். இதன் அறிமுக விழா நெல்லையில் உள்ள தெட்சணமாற நாடார் சங்க அலுவலகத்தில் வைத்து நடந்தது.
இந்த விழாவிற்கு தெடசண மாற நாடார் சங்க தலைவர் காளிதாஸ் நாடார் தலைலை வகித்தார். சங்க காரிய கமிட்டி உறுப்பினர் கணேச நாடார் முன்னிலை வகித்தார். செயலாளர் சண்முகேவேல் நாடார் நூலை அறிமுகம் செய்ய பொருளாளர் செல்வராஜ் நாடார் நூலை பெற்று கொண்டார். இந்த விழாவில் கீழப்பாவூர் முன்னாள் சேர்மன் காமராஜ், கமிட்டி உறுப்பினர் ராமர்நாடார், சங்க மேலாளர் முருகேசன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


