தூத்துக்குடியில் திமுக வேட்பாளராக கனிமொழி அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கி திமுகவினர் கொண்டாடினர்.
தூத்துக்குடி பராளுமன்ற தொகுதிக்கு திமுக வேட்டபாளராக கனிமொழி அறிவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் தொகுதி திமுக பொறுப்பாளர் கால்வாய் இசக்கி பாண்டியன் தலைமையில் சுமார் 25 பெண்கள் உள்பட சுமார் 50 திமுகவினர் திரண்டனர். பின் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். அப்போது அங்கிருந்த சிறு குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கி கொண்டாடினர். பஸ்ஸில் வந்த பயணிகளிடமும் இனிப்பு வழங்கப்பட்டது.
பஸ்ஸில் பயணித்த குழந்தை ஒன்றுக்கு மோதிரம் வழங்கப்பட்டது. கருங்குளம் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகள் மூன்று பேருக்கும் மோதிரம் வழங்கப்பட்டது. முன்னாள் கவுன்சிலர் தனம், அப்துல் காதர், சகாயம், ஐயப்பன், சிவசுப்பிரமணியன், துரை, முத்துபலவேசம், கோபாலகிருஷ்ணன், மாரிமுத்து, முருகன் உள்பட திமுகவினர் கலந்து கொண்டனர்.