இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் 119-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, விளாத்திகுளம் தெற்கு ஒன்றியம் பூசனூரில் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் கோலாகலமாக நடைபெற்றது.

மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான ஜி.வி. மார்க்கண்டேயன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். சீறிப்பாய்ந்த காளைகளைச் சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றியச் செயலாளர்கள் இமானுவேல், அன்புராஜன், பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, விளாத்திகுளம் முன்னாள் தேவர் மகாஜன சமுதாயத் தலைவர் சுப்பிரமணியன், ஒன்றியப் பொருளாளர் முனியசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.