தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வரத்து குறைவாக இருந்ததால் விலை அதிகரித்து காணப்பட்டது. மீன்கள் வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது
தூத்துக்குடியில் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து 10 நாட்களுக்கு பின்னர் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் அனைவரும் இன்று காலை கரை திரும்பினர். கரை திரும்பிய மீனவர்களுக்குக் கடலில் குறைவாக இருந்ததால் மீன்களில் விலை கனிசமாக உயர்ந்து காணப்பட்டது.
சீலா மீன் கிலோ ரூ.1,300 வரையும், விளைமீன் கிலோ ரூ.700 வரையும், ஊளி பாறை ஆகிய மீன்கள் கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரையும் விற்பனையானது. சாலை மீன்கள் கூடை 2ஆயிரம் வரையும் விற்பனையானது. மீன்களின் விலை அதிகமாக இருந்தபோதிலும், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் போட்டிபோட்டு மீன்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.


