தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், மரியாதை நிமித்தமாக வரவேற்பு அளித்தார்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரியின் பவள விழா மற்றும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 105-வது நிறுவன விழா ஆகிய இரு முக்கிய நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வதற்காக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வருகை தந்துள்ளார்.
இன்று காலை தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு ஆளுநரை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், நேரில் சந்தித்துப் புத்தகம் வழங்கி மரியாதை நிமித்தமாக உற்சாக வரவேற்பு அளித்தார். தொடர்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் ஆளுநரை வரவேற்றார்.
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியின் பவள விழா மற்றும் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று புதன்கிழமை நடைபெறுகிறது. இக்கல்லூரியின் முன்னாள் மாணவரான துணை குடியரசுத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் 105-ஆவது ஆண்டு நிறுவன நாள் விழாவிலும் பங்கேற்கிறாா்.
இவ்விரு நிகழ்ச்சிகளிலும் தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரும் பங்கேற்கிறாா். இதை முன்னிட்டு விழா நடைபெறும் வ.உ.சி. கல்லூரி வளாகம், திருச்செந்தூா் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுட்டுள்ளனர்.


