குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள கேக்கின் தயாரிப்புப் பணிகளை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் நேரில் ஆய்வு செய்தார்.
குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர்களுக்குக் கேக் வழங்கும் சிறப்புத் திட்டத்தைச் தமிழ்நாடு முதலமைச்சர் வரும் 13.11.2026 அன்று தொடங்கி வைக்கவுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள கேக்குகள் பெறப்பட்டுப் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு மற்றும் சோரீஸ்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் கேக்குகளின் இருப்பு மற்றும் தரம் குறித்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் இன்று (11.11.2026) நேரில் சென்று பார்வையிட்டுத் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், அவர்கள் உடனிருந்து ஆய்வின் விவரங்களை அமைச்சருக்கு விளக்கினார். மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் கேக்குகள் அனைத்தும் சரியான நேரத்தில் மற்றும் தரமான முறையில் பள்ளிகளுக்குச் சென்று சேருவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.


