தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 2026-27-ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சங்கத் தொடக்க விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 2026-27-ஆம் ஆண்டிற்கான மாணவர் சங்கத்தின் தொடக்க விழா கல்லூரியில் வைத்து நடைபெற்றது. மாணவர் சங்கத் துணைத்தலைவர் பா. கணேசன் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பொதுச் செயலாளராக க. ராகுல் (IV-B.F.Sc) இலக்கியச் செயலாளராக ச. ஜெய சூர்யா (IV-B.F.Sc) என்.எஸ்.எஸ். செயலாளராக பா. முத்து கேசவன் (IV-B.F.Sc) விளையாட்டுச் செயலாளராக சே. ஹரீஸ் (IV-B.F.Sc) அறிவியல் கழகச் செயலாளராக மு. ஹமிதா ரோஸன் (IV-B.F.Sc) ‘சீகல்’ இதழ் ஆசிரியர் செயலாளராக ந. சகாய நிமிஷா மோல் (IV-B.F.Sc) இணைச் செயலாளராக ஐ. ஆரோக்கியா ஷபிக் (III-B.F.Sc) பதவியேற்றனர்.
அதனைத் தொடர்ந்து 2026-27 கல்வியாண்டிற்கான பணித் திட்டங்களைப் சங்க நிர்வாகிகள் அறிவித்தனர். விழாவில் தலைமை வகித்து கல்லூரியின் பொறுப்பு முதல்வர் சீ.ஆ. சண்முகம் தனது உரையில், மாணவர்கள் தங்கள் தலைமைத்துவத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஊக்குவித்தார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஏ.பி.சி. மகாலெட்சுமி மகளிர் கல்லூரி முதல்வர் கே. பழனி, மாணவர்கள் தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என வாழ்த்திப் பேசினார். நிறைவாக, மாணவர் சங்கப் பொதுச் செயலாளர் க. ராகுல் நன்றி உரையாற்ற விழா இனிதே நிறைவுற்றது.


