செய்துங்கநல்லூரில் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்துவிட்டு வந்த போது, கணவன் கண் முன்னே கார் மோதி மனைவி பலியானார்.
செய்துங்கநல்லூர் பழையபள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சந்திரன் (55). இவரது மனைவி கலா (50). இவர்கள் இருவரும் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் உள்ள கோடராங்குளத்தில் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டு இருவரும் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரயிலில் ஊருக்கு திரும்பினர். நேற்று இரவு 7 மணிக்கு செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் இறங்கி வீட்டுக்கு செல்வதற்காக மெயின் ரோட்டுக்கு வந்தனர். அப்போது நெல்லையில் இருந்து வந்த கார் ஒன்று கலா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கலாவை 108 ல் ஏற்றி பாளை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். செல்லும் வழியில் அவர் பரிதபமாக இறந்தார். கணவன் கண் முன்பே மனைவி விபத்தில் சிக்கி பலியான சம்பவம் இப்பகுதியில பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து செய்துங்கநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் ராஜா ராம் வழக்கு பதிவு செய்தார் . இன்ஸ்பெக்டர் ரகு ராஜன் விசாரணை செய்து காரை ஓட்டி வந்த பாளை ராஜேந்திர நகர் மனோகரை (51) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


