வெளியிடத்து வாசகர்கள் அதிகமாக இருந்தாலும், உறவுகள் நம்மை ஓர் எழுத்தாளராகவோ அல்லது சமூக ஆர்வலராகவோ அங்கீகரிப்பதோ, நாம் செய்யும் நல்ல விஷயங்களை வரவேற்பதோ கடினம். நம்மைப் பற்றிய ஆழமான புரிதல் இல்லாமல் அதிகளவில் விமர்சனம் செய்வது உறவினர்கள்தான்.
கடல் தாண்டி எனக்கு வாசகர்கள் இருந்தாலும், எனது பேரன் நாட்டார்குளம் பிரவின் என்னுடைய நாவலான ‘கள்ளிக்காட்டு கள்ளவாண்டன்’ நூலைப் படித்து விமர்சனம் எழுதியுள்ளார். ஏற்கனவே எனது ‘முத்துக்கிளி’ நாவலுக்கும் இவர் விமர்சனம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
இந்த நாவலைப் பேரனுக்கு அறிமுகப்படுத்திய பேத்தி கவிஞர் பட்டியூராளுக்கும், பேரனுக்கும் மிக்க நன்றி. இந்த நூல், ‘ஏய்’ திரைப்பட இயக்குநர் திரு. வெங்கடேஷ் அவர்கள் கேட்டதற்கு இணங்க எழுதியது. படித்துப் பாருங்கள்!
நூல் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9442834236
அன்புடன்,
முத்தாலங்குறிச்சி காமராசு
வணக்கம் முத்தாலங்குறிச்சி காமராசு தாத்தா! ????❤️
தாத்தா, உங்களுடைய கள்ளிக்காட்டு கள்ளவாண்டன் புத்தகத்தைப் படிச்சு முடிச்சதும் என் மனசுக்குள் நிறைய எண்ணங்கள் ஓடிக்கிட்டே இருக்கு. ஒரு கதையைப் படிக்கிறோம்னு ஆரம்பிச்ச நான், ஒவ்வொரு பக்கத்தையும் படிக்கப் படிக்க அந்தக் கதைக்குள்ளேயே பயணிக்க ஆரம்பிச்சுட்டேன்.
இந்தக் கதையில் வரும் ஒவ்வொரு சம்பவமும் அடுத்து என்ன நடக்கும்னு தெரிஞ்சுக்கணும்கிற ஆர்வத்தை ஏற்படுத்துச்சு. சில இடங்களில் ஒரு திரில்லர் படம் பார்க்கிற மாதிரியே இருந்துச்சு. ஒரு பக்கத்தைக்கூட விட்டுட்டுப் படிக்க முடியல. ஒவ்வொரு சம்பவமும் அடுத்த சம்பவத்தோடு இணைஞ்ச விதம் என்னை ஆச்சரியப்படுத்துச்சு.
இருபது வருஷம் சிறையிலிருந்து வெளியே வர்ற கள்ளவாண்டன், இனிமேல் எந்தத் தப்பும் செய்யக்கூடாதுன்னு நினைச்சு தன்னோட வாழ்க்கையைத் தொடங்குறான். தன்னோட அம்மாவையும் மனைவி கனியையும் நல்லா பார்த்துக்கணும்னு ஆசைப்படுறான். ஆனா அவன் எவ்வளவுதான் நல்லவனா வாழ முயற்சி செய்தாலும், அவனுடைய கடந்த காலம் அவனைத் தொடர்ந்து வந்துகிட்டே இருக்கு.
சொந்தபந்தங்கள் கூட உதவாத நேரத்துல.
பழியை கூட தானே ஏற்று கொண்டு உதவிய களரி மாஸ்டர் உதவுனது சிலிர்க்கவைதது.
மற்றவர்களுக்காக உதவி செய்யுற கள்ளவாண்டன், ஒரு கட்டத்தில் பலருக்கும் பாதுகாப்பாக மாறுறான்.
ஏதோ ஆக்சன் திரிபடம் போல மிரட்டலாக இருந்தது உங்கள் வரிகள்.
இயற்கை அழகை விவரித்தவிதம் மிகவும் அருமையாக இருந்தது .மேலும் காட்டுக்குள் தப்பி செல்லும் பொழுது
திக் திக் நிமிடங்கள் போல ஆற்றில் நடந்தவை யானை வரும் காட்சி எல்லாம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது
குஜராத் மண்ணின் பெருமைகளை கூறும் பொழுது அவ்வளவு மாற்றங்கள் இந்தியாவில் நிகழ்ந்துஇருக்கிறதா என்று ஆச்சர்யமாக இருந்தது நாய் கூட சைவம் சாப்டுகிறது ஆறுகள் சுத்தமாக வைத்தது குப்பையை கீழே போட்டால் அபராதம் விதிக்கப்படும் என அனைத்தும்
கதையில எனக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினது, ஒவ்வொரு முறையும் கள்ளவாண்டன் ஒரு பிரச்சினையிலிருந்து வெளியே வரும்போது, அடுத்த பிரச்சினை அவனைத் தேடி வர்றதுதான். அவன் அமைதியா வாழணும்னு நினைக்கிறான்; ஆனா அவனுடைய கடந்த காலத்தோட தொடர்புடைய சம்பவங்கள் அவனை விடவே இல்லை.
கதையின் கடைசிப் பகுதிக்கு வந்தபோது, தோரணராஜ் பற்றிய உண்மை தெரிஞ்சது இன்னொரு பெரிய திருப்பம். தன்னுடைய சொந்த அப்பாவின் மரணத்துக்குப் பழிவாங்குவதற்காக, கள்ளவாண்டனின் மகனாகவே வளர்ந்து, கடைசியில் அவனையே கொல்லும் அளவுக்கு அந்தப் பழிவாங்கும் எண்ணம் அவனை ஆட்கொண்டிருக்கு. இத்தனை நாள் அன்போடு வளர்த்த பையனே இப்படிச் செய்வான்னு நினைக்கும்போது மனசுக்கு ரொம்பக் பெரிய அதிர்ச்சியாகவும் கஷ்டமா இருந்துச்சு.
கடைசியில் கள்ளவாண்டனும் தோரணராஜும் உயிரிழக்கிற அந்தச் சம்பவம் மனசைப் பாரமாக்கிடுச்சு. ஒரு பக்கம் கணவன், இன்னொரு பக்கம் மகன் என்று இருவரையும் இழந்து நிற்கிற கனியின் நிலைமை நினைச்சுப் பார்த்தாலே வேதனையா இருக்கு.
தாத்தா, இந்தக் கதையைப் படிச்ச பிறகு எனக்குத் தோணின ஒரு விஷயம் என்னன்னா, ஒருத்தர் செய்த தவறுக்குப் பழிவாங்கணும்னு நினைக்கும்போது, அந்தப் பழிவாங்கும் எண்ணம் இன்னும் எத்தனை பேருடைய வாழ்க்கையைப் பாதிக்கும்னு யாருக்கும் தெரியாது. கள்ளவாண்டன் தன்னோட கடந்த காலத்தை மறந்து நல்லவனா வாழணும்னு நினைச்சாலும், அந்தக் கடந்த காலத்தின் விளைவுகள் அவனை இறுதிவரை துரத்திக்கிட்டே இருக்கு.
உங்களுடைய கதையில் எனக்கு மிகவும் பிடித்தது, ஒவ்வொரு சம்பவத்தையும் அடுத்தது என்ன நடக்கும்னு யோசிக்க வைக்கிற விதம்தான். கதையைப் படிக்கும்போது சில இடங்களில் ஆச்சரியப்பட்டேன்; சில இடங்களில் மனசு வலிச்சது. கடைசியில் புத்தகத்தை முடிச்ச பிறகும், கள்ளவாண்டனுடைய வாழ்க்கையை நினைச்சுக்கிட்டே இருந்தேன்.
தாத்தா, உங்களுடைய இன்னொரு புத்தகத்தைப் படிச்ச அனுபவமும் எனக்கு இதே மாதிரி இருந்தது. நீங்கள் எழுதுற கதைகளில் வரும் சம்பவங்கள் படிச்சு முடிச்சதும் உடனே மறந்துபோகிற மாதிரி இல்லாமல், மனசுக்குள் தொடர்ந்து ஓடிக்கிட்டே இருக்கு.
ஒரு புத்தகத்தைப் படிச்சு முடிக்கிறது என்பது அதன் கதையை மட்டும் தெரிஞ்சுக்கிறது இல்ல; அந்தக் கதையில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கையை நம்ம மனசுக்குள்ள எடுத்துட்டுப் போறதும்தான்.
அந்த அனுபவத்தை எனக்குக் கொடுத்ததற்கு நன்றி தாத்தா! -நாட்டார்குளம் பிரவின்


