கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் வ.உ.சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 1 லட்சம் மதிப்பிலான டெஸ்க் பெஞ்ச் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ.உ.சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் 1லட்சம் மதிப்பிலான டெக்ஸ்க், பெஞ்ச்கள் ரோட்டரி மாவட்ட 3212 வின் 2025-26ம் ஆண்டின் நிதியிலிருந்து வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்கதலைவர் முத்து முருகன் தலைமை வகித்தார். மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர் பரமேஸ்வரன், மாவட்ட புரவலர் விநாயகா ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைவர் ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார். ரோட்டரி முன்னாள் ஆளுநர் தினேஷ் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1லட்சம் மதிப்பிலான டெக்ஸ்க், பெஞ்ச்களை வழங்கி பேசினார்.
இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் அண்ணாதுரை,முத்துச்செல்வம்,பாபு, நாராயணசாமி, பழனி குமார், கண்ணன், மாரியப்பன், நடராஜன், ரத்தின குமார், டென்சிங் பால்ராஜ், இளங்கோ, பள்ளி ஆசிரியர்கள் ஜெய்சங்கர், ராஜா சுந்தர், சுதாகரன், சிவக்குமார், மாரிமுத்து உள்பட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பள்ளி தலைமை ஆசிரியர் ராமசுப்பிரமணியன் நன்றி கூறினார்.


