திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உண்டியல் மூலம் அக்டோபர் மாதத்தில் ரூ.5.26 கோடி பணம் மற்றும் 1,236 கிராம் தங்கம் கிடைத்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் கோயில் நிர்வாக அலுவலக அரங்கில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றன. இதன்படி, பக்தர்கள் காணிக்கையாக ரூ.5,26,22,024 பணம், தங்கம் 1,236 கிராம், வெள்ளி 34,262 கிராம், பித்தளை 49,005 கிராம், செம்பு 5,156 கிராம், தகரம் 12,544 கிராம், வெளிநாட்டுப் பணத்தாள்கள் 2,102 இருந்தன.
இப்பணியினை அறங்காவலர் குழுத் தலைவர் இரா. அருள்முருகன் பார்வையிட்டார். இணை ஆணையர் அருணாசலம், அறங்காவலர்கள் வனிதா, செல்வாராஜ், அரிஸ்டோ லோகநாதன், பிரபாகரன், துணை ஆணையர் யக்ஞ நாராயணன், உதவி ஆணையர்கள் ராமசுப்பிரமணியன், லோகநாதனும், அலுவலகக் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், ஆய்வர் மகேஸ்வரி, பொதுமக்களின் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன் உள்ளிட்டோர் மற்றும் கோயில் பணியாளர்கள், அயற்பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.


