தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் வரும் 10ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது
இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் வரும் 10ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இளம் வாக்காளர்களின் பெயர்களைச் சேர்க்கும் வகையில் (தொடர் திருத்தம் – 2026), மாவட்டத்தின் அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 10.10.2026 (சனிக்கிழமை) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் இச் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
முகாம் நடைபெறும் நாளன்று, வாக்குச்சாவடி நிலைப் அலுவலர்கள் (BLO) உரிய விண்ணப்பப் படிவங்கள் மற்றும் நடப்பு வாக்காளர் பட்டியலுடன் மையங்களில் தயாராக இருப்பார்கள்.
எனவே, புதிய மற்றும் இளம் வாக்காளர்கள் தங்களது வண்ண பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்-1, வயதுச் சான்று மற்றும் முகவரிச் சான்றுகளின் நகல்களுடன் தங்களது பகுதி வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட தகுதியுடைய நபர்கள் அனைவரும் இச் சிறப்பு வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.


