தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்சங்கம்,சங்கர்நகர்ஸ்ரீஜெயந்திரசரஸ்வதிசுவாமிகள் பொன்விழா மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி இன்ட்ராக்ட் கிளப் ,நம்தாமிரபரணி,பசுமைபாரதம்அமைப்பு,நெல்லைஇயற்கைநலசங்கம் சார்பில் ஆறுகள் தினத்தைமுன்னிட்டு தாமிரபரணி
மணி மூர்த்தீஸ்வரம் படித்துறையில் வைத்துதாமிரபரணி பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றிய ஓவியம், கவிதை போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்குபரிசுவழங்கி, வீடுவீடாகவிழிப்புணர்வு துண்டு பிரசுரம்வழங்கப்பட்டது போட்டியில் வெற்றி பெற்ற மாணவமாணவர்களுக்குமாநகர காவல் உதவி ஆணையாளர் கே.பி. கணேசன் பரிசுகள்வழங்கினார் நிகழ்விற்கு அரசு ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் இரா.சீதாராமன் தலைமைதாங்கினார்.கவியரசு கண்ணதாசன் இலக்கிய மன்ற தலைவர் முனைவர் திருக்குறள் இரா. முருகன், நெல்லை இயற்கை நல சங்க தலைவர்பொறியாளர்பி.ஏ.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.மாநிலமகளிர்அணிச்செயலாளார்வே.தேவிகாதொடக்கவுரையாற்றினார்.கோமதிகிருஷ்ணமூர்த்தியின் நதிகள் பாதுகாப்பு பொம்மலாட்ட சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பசுமை பாரதம் அமைப்பு தலைவர் இசை ஆசிரியர் ஜேசுராஜன்,மகளிர் அணிபொறுப்பாளர் பொன்னம்மாள் குழுவினர்ஆகியோர்தாமிரபரணிவிழிப்புணர்வுபாடல்பாடினர்.சிறப்புஅழைப்பாளராகமாவட்டஆட்சியரின்நேர்முகஉதவியாளர்.த.அனிதா, மாநகர காவல் உதவி ஆணையர் கே.பி.கணேசன்ஆகியோர்கலந்து கொண்டுபோட்டியில்வெற்றிபெற்றவர்களுக்குபரிசுவழங்கியும்,துண்டுபிரசுரங்கள்வழங்கியும் சிறப்புரையாற்றினார்கள்.எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, மாவட்ட நுகர்வோர்விழிப்புணர்வு இயக்க பொதுச் செயலாளர் கவிஞர்கோ.கணபதிசுப்பிரமணியன்தாமிரபரணிபாதுகாப்புஇயக்கபொறுப்பாளர்வித்தியாசேகர், நம்தாமிரபரணி சாமிநல்லபெருமாள்ஆகியோர்தாமிரபரணி பாதுகாப்பு குறித்தும்பொதுமக்கள்ஆற்றவேண்டிய கடமைகுறித்தும்விழிப்புணர்வுஏற்படுத்தினார்.தாமிரபரணி பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.மணி மூர்த்தீஸ்வரத்தைச் சார்ந்தசந்திரா, ,ஓய்வூதியர் சங்க
மகளிர்அமைப்பினர்ஞான சௌந்தரி, சுசிலாதேவி,முன்னாள்வனஅலுவலர்நடராஜன்,பொருளாளர்வெங்கடாசலம் , சிவப்பிரகாசர் நற்பணி மன்ற துணைச்செயலாளர்கவிஞர்.சு.முத்துசாமி,ஆசிரியர் செல்லபாண்டியன்மற்றும்பொதுமக்கள்பெண்கள்,இளைஞர்கள்,மாணவ மாணவியர் பலர் கலந்துகொண்டனர்.நிறைவாகமாவட்டச்செயலாளர்சங்கரநாராயணன் நன்றி கூறினார்.விழாவிற்கான ஏற்பாடுகளை சங்கர்நகர்ஜெயந்திரா பள்ளி முதல் துணைமுதல்வர்கங்காமணி அரசு ஓய்வூதிய சங்க மாநில மகளிர் அணி செயலாளர் தேவிகாஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.


