அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், விஆர்எப் மற்றும் இஎல்சிஇ மருத்துவ அறக்கட்டளை சார்பில் நிவாரணப் பொருட்கள் பேமிலி கேர் அமைப்பு மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
அனுப்பப்பட்ட பொருட்கள் விவரம்:
1. பினாயில் திரவம் – இருநூற்று ஐம்பது கிலோ
2. பிளீச்சிங் பவுடர் – இருநூற்று ஐம்பது கிலோ
3. முகக்கவசம் – ஆயிரம் எண்ணம்
4. சலவைத்தூள் – பத்து கிலோ
5. அத்தியாவசிய மருந்துகள்
இப்பொருட்கள் அசாமில் உள்ள தன்னார்வலர்களால் பெறப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது.
இந்நிகழ்வில் இஎல்சிஇ மற்றும் விஆர்எப் நிறுவனர்கள் மருத்துவர் ராஜன், மருத்துவர் வித்யா ராஜன், பேமிலி கேர் அமைப்பின் மருத்துவர் ரேணுகா, எஸ்விஎச்பி அனிதா ஆகியோர் கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தனர்.


