தூத்துக்குடியில் சட்டம் – ஒழுங்கு மற்றும் கனிம வளங்கள் கடத்தல் தடுப்புக் குழு ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சட்டம் – ஒழுங்கு, சாலை பாதுகாப்பு, போதைப்பொருள்கள் தடுப்பு, கள்ளச்சாராயம் தடுப்பு மற்றும் கனிம வளங்கள் கடத்தல் தடுப்பு ஆகியவை தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (27.08.2026) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமை தாங்கினார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்டத்தில் சட்டம் – ஒழுங்கைப் பராமரித்தல், விபத்துகளைக் குறைக்கச் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துதல், போதைப்பொருள்கள் மற்றும் கள்ளச்சாராய விற்பனையை முற்றிலுமாகத் தடுத்தல், சட்டவிரோத கனிம வளங்கள் கடத்தலைக் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த மாவட்ட அளவிலான அரசு அலுவலர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


