இன்று 16-08-26 ஞாயிற்றுக்கிழமை வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் ஆற்றங்கரையில் வீ த லீடர்ஸ் சார்பில் “நம்ம ஊரு! நம்ம ஆறு! என்ற மக்கள் இயக்கத்தின் கீழ் தாமிரபரணி ஆற்றங்கரை தூய்மை பணி மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
வீ த லீடர்ஸ் முதன்மை சேவகர் K.அண்ணாமலைஅவர்கள் ஆகஸ்ட் மாதம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விழிப்புணர்வு, தூய்மை பணிகள் மேற்க்கொள்ள வேண்டுகோள் வைத்தார்.
அதன்படி திருநெல்வேலி வீ த லீடர்ஸ் தன்னார்வலர்கள் சென்ற வாரம் ஞாயிறன்று குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றங்கரையில் தூய்மை பணி நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக இன்றும் தூய்மை பணி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இதில் வீ த லீடர்ஸ் தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள்,பெண்கள் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஆற்றங்கரையில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் கழிவுகள், துணிகள்,மதுபாட்டில்கள் மற்றும் பல்வேறு குப்பைகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
இந்த தூய்மை பணியில் சுமார் 3 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு திருநெல்வேலி மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், தாமிரபரணி ஆற்றின் முக்கியத்துவம், நீர்நிலைகளை பாதுகாப்பதன் அவசியம், ஆற்றங்கரையில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டாமல் இருப்பது உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
“நமது பொருநை நமது பொறுப்பு” என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதுடன், தாமிரபரணியை தொடர்ந்து பாதுகாக்கும் வகையில் ஆகஸ்ட் 30 தேதிக்குள் தாமிரபரணி பற்றி நம்ம ஊரு நம்ம ஆறு என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஓவியம்,கட்டுரை,குறும்படம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு இதில் பங்கேற்றவர்களுக்கு சிறப்பு பரிசிகளும் வழங்கப்பட உள்ளது.
இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து தொடர்ந்து தூய்மை மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த வார ஞாயிற்றுக்கிழமையும் தாமிரபரணி தூய்மை பணிகள் தொடரும் என வீ த லீடர் தன்னார்வலர் ச.வேல்கண்ணன் தெரிவித்து உள்ளனர்..
நமது பொருநை – நமது பொறுப்பு!
நம்ம ஊரு! நம்ம ஆறு!


