தென் மாவட்டங்களின் முக்கிய ரயில் நிலையமான தூத்துக்குடி, வருமானப் பட்டியலில் மண்டல அளவில் 23-வது இடத்தைப் பிடித்துள்ளது.
தெற்கு ரயில்வே மண்டல அளவிலான முதல் 50 முக்கிய ரயில் நிலையங்களின் வருமானப் பட்டியல் (2025-26 நிதியாண்டு) வெளியாகியுள்ளது. இதில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய ரயில் நிலையங்கள் கணிசமான வருவாய் ஈட்டி முன்னணியில் பிடித்துள்ளன.
திருநெல்வேலி சந்திப்பு நிலையம் 2025-26 நிதியாண்டில் ஆண்டிற்கு ₹168.34 கோடி வருமானம் ஈட்டி, தெற்கு ரயில்வே மண்டல அளவில் 07-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
தென் மாவட்டங்களின் முக்கிய துறைமுக நகர ரயில் நிலையமான தூத்துக்குடி, மண்டல அளவில் 23-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஆன்மீகம் மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த தென்காசி ரயில் நிலையம், ஆண்டிற்கு ₹25.39 கோடி வருவாய் ஈட்டி 28-வது இடத்தைப் பெற்றுள்ளது.
தென் மாவட்டங்களில் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் ரயில் போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதையே இந்த வருவாய் வளர்ச்சி காட்டுகிறது.


