தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ச.ஜோசப் விஜய்க்கு, இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் நிறுவனர் சகோதரர் மோகன் சி. லாசரஸ் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார்
தமிழகத்தில் மதுப் பழக்கத்தினால் லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்து வருவதாகத் தெரிவித்துள்ள மோகன் சி. லாசரஸ், குறிப்பாக இளைய தலைமுறை மற்றும் மாணவர்கள் மது அரக்கனின் பிடியில் சிக்கித் தங்களது எதிர்காலத்தை இழந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் சுமார் ஒன்றரை கோடி மக்கள் குடிகாரர்களாக மாறி இருப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். மதுவினால், சாலை விபத்துகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகுவதற்கு மதுவே முதன்மைக் காரணமாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய ஆட்சியை அமைத்துள்ள முதல்வர் ச.ஜோசப் விஜய், தமிழக மக்களின் நல்வாழ்வையும் எதிர்காலத் தலைமுறையினரின் ஒழுக்கத்தையும் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகளையும் படிப்படியாக மூடாமல் உடனடியாக முழுமையாக மூடி, மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என மோகன் சி. லாசரஸ் வலியுறுத்தியுள்ளார்.


