தூத்துக்குடி மாவட்ட புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பெ.சா. கருப்பணராஜவேல் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த நவீன் பாண்டியன் சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில், புதிய அலுவலராக பெ.சா. கருப்பணராஜவேல் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் பெ.சா. கருப்பணராஜவேல் கோப்புகளில் கையெழுத்திட்டுத் தனது புதிய பொறுப்பினை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தின் அரசு நலத்திட்ட உதவிகள், மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் செய்திகளைப் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்குத் துல்லியமாகவும் வேகமாகவும் கொண்டு சேர்க்கும் முக்கியப் பொறுப்பை இவர் இனி கவனிப்பார். இவர் பொறுப்பேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகப் பிரிவினர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்


