முன்கதை சுருக்கம்.
சுதந்திரம் அடையும் முன்பு நடந்த சம்பவம் தென்தமிழகத்தில் நடந்த சம்பவம் இதுவாகும். திருச்செந்தூர், உடன்குடி பகுதியில் வெள்ளையனே வெளியேறு போராட்டம் மிகப் பிரமாண்டமாக நடந்தது. அப்போது காந்தியடிகளில் செய் அல்லது செத்து மடி என்ற கோஷம் திருநெல்வேலி மாவட்ட இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த வேளையில் தான் குலசேகரபட்டினம் உப்பளத்தில் கொடுமையான வெள்ளைத்துரை லோன் துரை என்பவன் நம்மவர்களை அடிமைப்படுத்தி கொடுமைப் படுத்தி அடக்குமுறையில் வேலை வாங்கினான். இதை தட்டிக்கேட்ட காங்கிரஸ் சுதந்திர போராட்ட இளைஞர்கள் அவனை பழி வாங்க வேண்டும் என நினைத்தனர். அவனை பயங்காட்டி மிரட்டி வைக்க வேண்டும் என்று இரவில் உப்பளத்துக்குள் நுழைந்தனர். இந்த சம்பவத்தில் அவன் கொலை செய்யப்பட்டான். கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை கண்டுபிடிக்க டெப்டி சூப்ரின்டென்ட் ராவ்பகதூர் டி. எம். அப்பாத்துரை பிள்ளை தலைமையில் போலிசார் குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கொலை யாளிகளுக்கு உதவிய மேகநாதன் போலிசாரால் விரட்டப்படுகிறான். சித்தன் விளை பெரியநாடார் இல்லத்தில் போலிசார் சோதனை நடத்துக்கிறார்கள். தப்பி ஒடியவர்களை போலிசார் கைது செய்தார்களா?
இனி.
சித்தன்விளை மீது போலிசார் கண் வைத்தனர். என் தான் அவர் குற்றவாளி இல்லை என்று உறுதி செய்தாலும், நிச்சயம் தப்பி ஓடிய கைதிகள் நிச்சயம் இவருடன் தொடர்பு வைத்திருப்பார்கள் என எண்ணினர் போலிசார்.
ஏற்கனவே பெரியநாடார் மீது பலி போட்டு, அவர் நீதிபதி முன்பு நிறுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். ஆகவே தப்பி ஓடியவர்களின் தொடர்பு இல்லாமல் தவிர்த்து வந்தார். அதேவேளையில் சித்தன்விளை ஊர் காரர்கள் காங்கிரஸ்காரர்களுக்கு உதவியாக இருந்தார்கள். ஆனால் போலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவர்கள் யார்? எங்கே இருக்கிறார்கள்? எப்படி காங்கிரஸ்கார்களுக்கு உதவுகிறார்கள்.
போலிசாருக்கு தலைகுனிவாக போய்விட்டது.
வெள்ளக்காரதுரைகள் மேலே இருந்து மிரட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.”நீங்களும் இந்தியர்கள் தானே அது தான் கொலையாளியை பிடிக்க மாட்டேன் என்கிறீர்கள்” என குறைசொன்னார்கள்.

இதனால் போலிசாருக்கு கோபம் வந்தது.
சுதந்திரபோராட்டத்திற்காக கைது ஆனவர்கள் பாடோ பெரும் பாடாக இருந்தது.
அதில் ஒருவர் மங்களா பொன்னம்பலம். இவர் கைதாகி சிறையில் இருக்கிறார். அவருக்கு நடக்கும் கொடுமை எண்ணில் அடக்காத ஒன்றாகும்.
போராட்டத்தில் ஈடுபடும் முக்கியமாக இருந்தவர்கள் அதிகமானோரை சிறைக்கு அனுப்பி உள்ளனர். இதில் கிராம முன்சீப்பும் அனுப்பப்படுகிறார். இதில் மூன்று பேர் அரசு பணியில் இருந்தவர்கள். முக்கியமாக காயல்பட்டிணத்தில் கர்ணமாக இருந்தவரும் இதில் அடங்குவார்.
மங்களா பொன்னம்பலம்.
சிறையில் இருந்த நேரம்.
மலம் ஜலம் கழிப்பதற்காக ஒரு டிரம் இருந்தது. அந்த டிரம் மேல் ஒரு கட்டை போட்டிருப்பார்கள். அதன் மேல் இருந்துதான் மலம் ஜலம் கழிக்க வேண்டும். என்ன கொடுமை.
ஒரு நாள் தான் அந்த சம்பவம் நடந்தது.
மங்களா பொன்னம்பலம் ள் மலம் கழித்து கொண்டிருக்கும் போது தவறி டிரம் உள்ளே விழுந்து விடுகிறார்.
அங்கே இருந்தவர்கள் ஆடிப்போய்விடுகிறார்கள்.
டிரம் முழுவதும் தொடர்ந்து கழித்த மலம் இருந்தது. அந்த மலத்தில் விழுந்தவர் கிட்டத்தட்ட கழுத்து வரை மூழ்கி விட்டார்.
அவரை உள்ளே இருந்து வெளியே தூக்கினார்கள்.
உடல் முழுவதும் மலமாக இருந்தார். அவரை பார்க்கவே அறுவறுப்பாக இருந்தது.
அருகில் யாரும் நிற்க முடியவில்லை. தூர் நாற்றம் வீசியது.
“ஐயோ. இது என்ன கொடுமை”.
இந்த மலத்தினை கழுவ வேண்டும் என்றால் நன்றாக குளிக்க வேண்டும்.
இதற்காக நிறைய தண்ணீர் வேண்டும்.
ஜெயில் வார்டனிடம் இவரது நண்பர்கள் ஓடிப்போய் செல்கிறார்கள்.
“துரை பொன்னம்பலம் மலத்தில் விழுந்துவிட்டான்”.
“அப்படியா?”
“அவன் உடல் தூர் நாற்றம் வீசுகிறது”.
எந்த சலனமும் இல்லாமல் போலிஸ் அவர்களை நோக்கி கேலியாக கேட்டார்கள்.
“ம். அப்புறம்”
“அவன் மீது இருக்கும் மலத்தினை கழுவ வேண்டும்”.
“ஓ. கோ”.
“அதற்கு தண்ணீர் வேண்டும்”.
கள்ள தனத்துடன் சிரித்தான் வார்டன். “பொன்னம்பலம். மலஅம்பலம் ஆகி விட்டான். ஹா ஹா” என வெறிகொண்டபடி சிரித்தான்.
அனைவருக்கும் கோபமாக இருந்தது. என்ன செய்ய முடியும். எல்லாமே ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது.
“துரை அவனை பார்க்க பாவமா இருக்கு”.
“அதுக்கு?”
“தண்ணீர் வேண்டும்”.
“நான் தர மாட்டேன் என்ன செய்வீர்கள்”.
அனைவரும் அமைதியாகி விட்டார்கள்.
வெள்ளத்துரையின் கைகூலிகளை நாம் என்ன செய்ய. இவர்கள் கொஞ்ச நஞ்ச பிரச்சனைகளா செய்கிறார்கள்.
பலி வாங்க வேண்டும். இந்த கை கூலிகளை ஓட ஒட விரட்ட வேண்டும்.
“ஏலே அவனுவ கிட்ட நீதி கிடைக்காது வா. போவோம். பொன்னம்பலம் இந்த ரணத்தை அனுபவிச்சுத்தான் தீரணும். கொஞ்சம் பொறுமையா இருக்க சொல்லணும்”.
இருவரும் அங்கிருந்து நகர்ந்தார்கள்.
பொன்னம்பலம் அருகில் வந்தனர். அவரை பார்க்கவே வருத்தமாக இருந்தது. மலம் கொஞ்சம் கொஞ்சமாக காய ஆரம்பித்தது. இப்படியே குளிப்பாட்டினால் சுலபமாக இருக்கும். மலம் அவன் மீது காய்ந்து விட்டால் என்ன செய்வது. அங்கிருந்தவர்கள் பழைய துணி இலை தழைகளைகொண்டு வந்து அவன் மீது இருந்த மலத்தினை வலித்து எடுத்து எரிந்தனர்.
போலீஸ் மீது அவர்களுக்கு வெறுப்பாக இருந்தது. ஆனால் எங்கே போய் காட்ட.
“கொஞ்ச நஞ்ச கொடுமையா இவனுக செய்றாங்க. ஏடே எங்களுக்கு காலம் வருமுடே. நிச்சயம் நாடு சுதந்திரம் அடையும். அப்போ பாருங்க. உங்களை ஓட ஓட விரட்டுதோம்” மனதுக்கு சாவலாக எடுத்துக்கொண்டனர்.
ஆறுமுகநேரி மீது மிகுந்த காட்டம் போலிசுக்கு உண்டு. காரணம் லோன் துரை வழக்கில் முதல் இரண்டு குற்றவாளியும் ஆறுமுகநேரியை சேர்ந்தவர்கள்தான். காசிராஜனும், ராஜாகோபாலும் அந்த ஊரை சேர்ந்தவர்கள்தான். இது தவிர பலர் இந்த கூட்டத்தில் இருந்தனர். அது போல வீட்டுக்கு ஒரு வீரர் இருந்தனர். எனவே அவர்களை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என போலிசார் நினைத்தனர்.
ஒரு நாள் போலிசார் கும்பலாக ஆறுமுகநேரி வந்தனர். ஒவ்வொரு வீடாக போய் அங்கே இருந்த இளைஞர்களை வீதிக்கு இழுத்து வந்தனர்.
அவர்கள் அனைவரையும் சந்தை பக்கத்தில் கொண்டு வந்தனர். அனைவரையும் வரிசையில் விட்டனர். என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்றுதெரியாமல் இளைஞர்கள் தவித்தனர்.
போலிசார் இளைஞர்கள் அனைவரின் பின் கைகளையும் கட்டினர்.
அதன் பின் உப்பளத்தில் இருந்து மூடை மூடையாக உப்பு கொண்டு வந்தனர்.
அந்த பெரிய சந்தை வளாகத்தில் உப்பை கீழே விரித்தார்கள்.
“என்னடா இது. எதற்காக இப்படி செய்கிறார்கள். என இளைஞர்கள் யோசித்தனர். ஆனாலும் அவர்கள் மனதில் கிலி பிடித்தது”.
“ஏதோ தண்டனை கொடுக்க போகிறார்கள். என்னவாக இருக்கும்”.
விரித்த உப்பை பார்க்கிறார்கள். பெரிய கல் உப்பு. சமையல் உப்பை விட பருமனாக இருந்தது.
“என்ன செய்யப்போகிறார்கள்”.
அதிகாலையில் சூரியன் அன்று சுட்டெரித்து கிளம்பியது. இந்த இளைஞர்களுக்-கு ஏதோ நடக்கப்போகிறது என அவர்களுக்கு உணர்த்தியது.
காவல்கள் அனைவருடம் இளைஞர்களை அங்கே இழுத்து வந்தனர். அந்த உப்பு மீது அந்த வீரர்களை முழங்கால் போட வைத்தனர்.
“நாங்க என்ன தப்பு செய்தோம்” என கேட்ட இளைஞர்களுக்கு அடி விழுந்தது.
என்ன செய்வது என்று தெரியாமல் இந்த இளைஞர்கள் முட்டங்கால் போட்டனர்.
சிறிது நேரம் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை. உப்புக்-கு மேலே முட்டங்கால் போட்டால் என்னவாகும்.
அனைவர் கண்களில் இருந்தும் கண்ணீர் வடிந்தது.
உட்கார்ந்து விடலாம் என சிலர் உட்கார்ந்து விட்டனர். ஆனால் போலிசார் பின்னால் இருந்து அவர்களை பிரம்பால் தாக்கினர்.
வேறு வழி தெரியாமல் இளைஞர்கள் முட்டங்கால் போட்டனர்.
இளைஞர்களை அழைத்து சென்று தண்டனை கொடுக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் உறவினர்களும் பெற்றோர்களும் ஓடி வந்தனர்.
“ஒண்ணும் அறியாதவர்களை இப்படி தண்டிக்கீறிர்களே என் அநியாயம்” என்று கேட்டனர்.
“என்ன அநியாயமா?. அப்போ ஒரு வெள்ளைக்கார துரையை கொலை செஞ்சது மட்டும் நியாயமா?”
“இங்கே பாருங்க லோன் துரை கொலையில் சம்பந்தப்பட்ட 27 பேர் மேலே வழக்கு போட்டு இருக்காங்க. காசிராஜனும், ராஜ கோபாலும் தான் கைது ஆகி இருக்காங்க. மற்றவங்களை இந்த ஊருல தான் மறைஞ்சி இருக்காங்க. அவனுவளை கொண்டு கொடுத்துட்டு நீங்க இவனுவளை கூட்டிட்டு போங்க”.
அனைவரும் வாயடைத்து நின்றனர். என்ன செய்வது. யாரிடம் சொல்வது. கொலையாளிகளை எப்படி கண்டு பிடித்து கொடுப்பது. இவர்களுக்கு பயந்து போய் அவர்கள் எங்கே ஒளிந்து கிடக்கிறார்களோ தெரியவில்லை. எப்படி பிடித்துக்கொடுப்பது.
இளைஞர்கள் துவண்டனர். முட்டு வலி. ரத்தம் சொட்ட ஆரம்பித்தது. இதற்கிடையில் சூரியன் சுட்டெரித்து தலை மீது வந்தது. இளைஞர்கள் தாகத்தில் தவித்தனர்.
“தண்ணீர் தண்ணீர்” என துவண்டனர்.

“யாருக்கும் ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க கூடாது”. அதிகாரிகள் மிகவும் கண்டிப்புடன் இருந்தனர்.
சுட்டெரிக்கும் வெயில் தலைக்கு மேல் ஏறியது. என்றும் இல்லாமல் இன்று சூரியன் ருத்ரதாண்டவம் ஆடினான்.
இளைஞர்களுக்கு நாக்கு வறண்டது. தண்ணீர் என்று சத்தம் கூட கொடுக்க முடியாமல் நாக்கு வறண்டது. பேச இயலவில்¬ல். கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.
உப்பு மீது நின்ற காரணத்தினால் முழங்காலில் இருந்து ரத்தம் வடிந்தது. சத்தம் குறைந்தது.
ஐயகோ இந்த இளைஞர்கள் என்ன பாவம் செய்தனர். பல இளைஞர்களுக்கு வன்மம் மனதில் தோன்றிது. “இந்த பரங்கி தலையர்களை நாட்டை விட்டே விரட்ட வேண்டும்” மனதுக்குள் கங்கனம் கட்டிக்கொண்டனர்.
இளைஞர்கள் வலி தாங்க முடியாமல் தவித்தனர். இளைஞர்கள் முணங்கும் சத்தம் அந்த இடம் முழுவதும் எதிரொளித்தது.
இவர்கள் முணங்கும் சத்தம் உப்பளத்தில் வேலை செய்தவர்கள் காதில் கேட்டது.
“என்ன நடக்கிறது” என்று கேட்டனர். இளைஞர்களுக்கு நடக்கும் கொடுமை அங்கே உள்ளவர்களுக்குதெரிந்தது.
அனைவரும் வேலையை போட்டுவிட்டு சந்தையை நோக்கி ஓடி வந்தனர். கங்காணி தடுத்தான். அவனை தள்ளி விட்டு விட்டு சந்தைக்கு வந்தனர்.
அங்கே தனது உறவினர்கள், சகோதரர்கள் மகன்கள் இருந்தனர். அவர்களுக்கு இந்த தண்டனை கொடுக்கும் குரூரமான போலிசு காரர்கள் மீது கோபம் வந்தது.
அய்யோ என கூச்சலிட்டனர். ஆனால் போலிசார் யாரையும் அவர்கள்அருகில் விடவில்லை.
தங்களது கண் முன்னே தண்ணீர் கேட்கும் தங்களது உறவினர்களுக்கு தண்ணீர் கூட கொடுக்க முடியவில்லை.
“மீறி யாராவது உள்ளே வந்தால் அவர்களுக்கு சவுக்கடி கொடுக்கப்படும். உப்பளத்தில் இனிமேல் வேலை கொடுக்க மாட்டோம் என போலிசார் ஒருபுறம் மிரட்டிகொண்டிருந்தனர்”.
அப்பாவி கூலி தொழிலாளிகள் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. யாருக்கும் தைரியம் இல்லை. காவலர்களை எதிர்க்க துணிவில்லை.
அங்கு ஒரு அதிசயம் நடந்தது
ஒரு பெண் யாருக்கும் பயப்படாமல் குடிதண்ணீர் கொண்டு வந்து அந்த வீரர்களுக்கு கொடுத்தாள்.
போலிஸ்காரர்கள் அவளை தடுத்தனர். பிரம்பை கொண்டு வந்து தாக்க முயன்றனர்.
ஆவேசமாக சாத்தமிட்டாள் அந்த பெண்.
“ஏய். மடையர்களே. இது எங்க மண். எங்க மண்ணு சுதந்தரத்துக்கு எங்க மண்ணுக்காக எங்க மண்ணு காரங்க போராடுதாங்க. அவங்களை பொம்பளை மாதிரி கட்டி வைச்சி முட்டங்கால் போட சொல்றீங்களே. முடிஞ்சா கயிற்றை அவுத்து விட்டு பாருங்கடா மூடபயலுகளே” என கத்தினாள்.
காவலர்கள் அப்படியே ஒதுங்கி நின்றனர்.
“நீங்களும் இந்த மண்ணில் பிறந்த தாய் வயித்துல பிறந்தவங்க தானே. உங்களுக்கு சுதந்திர தாகம் வரலை. யாரோ ஒருத்தன் கொலை பண்ணினான்னா தைரியம் இருந்தா அவனை பிடியுங்கள் . அதை விட்டுட்டு அப்பாவி இளைஞர்களை ஏன் தவிக்க விடுறீங்க”.
முட்டங்கால் போட்டு நின்ற பல வீரர்கள் மயங்கி சரிய ஆரம்பித்தனர். அவர்களின் முட்டங்காலில் இருந்து ரத்தம் பீரிட்டது. தாகத்தினால் துவண்ட அவர்களின் உதடுகள் தண்ணீர் தண்ணீர் என்று தவித்தது.
கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் கண்கள் செருக ஆரம்பித்தது.
அந்த பெண் எத்தனை பேருக்குத்தான் தண்ணீர் கொடுப்பாள். ஓடி ஓடி கொடுத்து பார்க்கிறாள்.
அவளால் கொடுக்க முடியவில்லை.
உச்சிவெயிலில் ஒவ்வொருவராக துவண்டு விழுந்தனர்.
அந்த பெண்ணுக்கு உதவியாக ஒரு சிலபெண்கள் வந்தனர்.
காவலர்கள் நினைத்தனர். ஆண்கள் வந்தால் அடித்து விரட்டி விடலாம். பெண்கள் உள்ளே வருகிறார்கள். அவர்களை அடித்தால் பிரச்சனை ஏற்பட்டு விடலாம்.
என்ன செய்யலாம்.
பயங்காட்டத்தான் இந்த முடிவு செய்தோம். இவர்களுக்கு இந்த தண்டனை இன்று போதும் என முடிவு செய்தனர்.
“இங்கே பாருங்க. இங்க இருக்கிற அத்தனை பேரையும் இப்போ விடுறோம். ஆனா. தப்பியோடி கொலையாளிகளை எங்களுக்கு பிடிச்சி தரணும். இல்லாட்டி திரும்பவும் இதே போல நாங்க இளைஞர்களை பிடித்து கொண்டு வந்த தண்டனை கொடுப்போம்”.
போலிசார் அனைவரையும் விரட்டினர்.
ஆனால் யாராலும் எழுந்து நடக்க முடியவில்லை. தவழ்ந்தபடியே கிளம்பினர். உறவுகார்கள் அவர்களை தோளில் போட்டு வீட்டுக்கு தூக்கி சென்றனர்.
அனைவர் மனதிலும் இந்த வெள்ளைகாரர்களை விரட்டி விட வேண்டும். என்று மனதில் உறுதி பூண்டனர்.
இங்குத்தான் இப்படி நடக்கிறது என்றார் திருச்செந்தூர் சிறைச்சாலையில் அதை விட பயங்கரமான துயர சம்பவம் நடந்து கொண்டிருந்தது.
சிறைச்சாலையில் உள்ள கைதிகளை கையையும் காலையும் கட்டி படுக்க வைத்தனர். அதன் பின் புறங்கையில் செங்கலை வைத்து கட்டினர். அவர்களை அசைக்க முடியாமல் தரையில் உருட்டினர்.
அதன்பின் நகக்கண்ணில் ஊசியை குத்தி கொடுமை படுத்தினர்.
அந்த கைதிகளின் அலறல் அந்த பகுதியையே திடுக்கிட வைத்தது.
வெளியே இருந்தவர்களின் நெஞ்சு பதைபதைத்தது.
இரவு பகல் என பாராமல் ஜெயிலுக்குள் தாக்குதல் தொடங்கியது. நகத்துக்குள் ஊசி குத்தியதால் கைதிகள் அலறினர்.
என்ன கொடுமை இது.
இப்படியா தண்டனை கொடுப்பது. அவர்கள் படும் பாடு திருச்செந்தூர் முருகனுக்கே பொறுக்கவில்லை. அவர் வெகுண்டு எழுந்தார் என்றே நினைக்க தோன்றியது.
உண்மைதானே. முருகப்பெருமானின் பக்தர்களான இந்த மக்கள் என்ன கேட்கிறார்கள்.
சுதந்திரம் கேட்கிறார்கள்.
அவர்கள் நாடு. அந்த நாட்டை ஆள கடல் கடந்து வந்த இவர்கள் எப்படி ஆள முடியும். முருகப்பெருமான் விடுவாரா என்ன?
திருச்செந்தூர் மண்ணுக்கு எப்போதுமே ஒரு பெருமை உண்டு.
முருகப்பெருமான் சூரனைவெற்றிகொண்ட ஊர். வெற்றி வேல் வீரவேல் என சூளுரைக்கும் நல் ஊர்.
ஒரு சமயம் டச்சுகாரர்கள் சண்முகர் சிலையை படகில் கடத்தி சென்ற போது நடுக்கடலில் பெரும் புயலை உருவாக்க அவர்களை திணறடித்து, அந்த சிலையை முருகப்பெருமான் அருளால் ஈட்டிக் கொண்ட நல்ல ஊர் திருச்செந்தூர்.
கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் முருகப்பெருமான்.
பக்தனுக்கு பிரச்சனை என்றால் எந்த ரூபத்திலும் முருகப்பெருமான் உதவுவார்.
இதோ இந்த கைதிகளுக்கு கொடுக்கும் கொடுமை சந்நிதானத்தில் அமைதியாக இருந்த முருகனுக்கு கேட்டுவிட்டது.
அவர் திருச்செந்தூரில் உள்ள இளைஞர்கள் மனதில் தோன்றினார்.
“இது உன் மண். உன் மக்களை கொடுமைபடுத்தும் அவர்களை விடலாமா?” என மனதுக்குள் ஏவினார்.
மறுநிமிடம்.
இளைஞர்கள் பட்டாளம் ஒன்று கூடினர். திட்டமிட்டு கொடுமை படுத்தும் நம்ம ஊர் மக்களை காப்பாற்ற வேண்டும். போலிசை தாக்கி அவர்களை மீட்க வேண்டும் என முடிவு செய்தனர்.
அனைவரும் கையில் கிடைத்த ஆயுதங்களை சேகரித்தனர்.
மறு நாள் .
அதிகாலை காவல்நிலையம் உள்ளே வந்தனர். அன்று என்னவோ கடல் அலை உக்கிரமான சத்தத்துடன் அலறிக்கொண்டிருந்தது.
மிகவும் அலட்சியமாக இருந்த காவலர்களை எதிர்பாராத விதமாக தாக்கினர்.
காவலர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.
லாக்கப்பில் இருந்த கைதிகளை கதவை உடைத்து காப்பாற்ற முயற்சி செய்தனர்.
ஆனால் அந்த முயற்சி வீணாணது.
இதற்குள் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலிஸ் படைக்கு இந்த தகவல் பறந்தது.
அவர்கள் கூட்டமாக சிறைச்சாலை வந்தனர்.
இவர்களை எதிர்ப்பார்க்காமல் வெற்றிக்களிப்பில் இருந்த இளைஞர்களை சிறைச்சாலைக்கு வைத்து வெளிக்கதவை முடினர்.
மறுநிமிடம்
உள்ளே நுழைந்த படை லத்தி சார்ஜ் செய்தது.

அவ்வளவு தான்.
இளைஞர்கள் நிலைகுலைந்தனர்.
அவர்களை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த இடமே மிகப்பெரிய ரண களமாக மாறி விட்டது.
டெப்டி சூப்ரின்டென்ட் ராவ்பகதூர் டி.எம்.அப்பாத்துரை பிள்ளை அங்கே வந்தார்.
அவர்கள் அனைவரை வரிசையாக நிற்க வைத்திருந்தனர்.
ஒவ்வொருவர் முகத்தினையும் பார்த்தார்.
இந்த இளைஞர்களுக்கு என்ன ஏது என்று தெரியாத வயது.
ஆனால் தனது சொந்த காரர்களை தாக்குகிறார்கள் என்று தெரிந்தவுடன் அவர்களை காப்பாற்ற வந்துள்ளனர்.
இவர்களுக்கும் தண்டனை கொடுத்தால், எதிராளியின் எண்ணிக்கை அதிகரித்து விடும். என்ன செய்யலாம்.
அனைவர் புறங்கையை கட்டி, ஒவ்வொருத்தல் பின்புறத்திலும் பிரம்பு வைத்து வெளுத்து வாங்கினார்.
“இனிமேல் இந்த பக்கம் வருவீர்களா?” என கேட்டு அவர்களை அனுப்பி விட்டார். வெளியே அனுப்பும் போது புறங்கையை அவிழ்த்து அனுப்பினார்.
உண்மைதான். தற்போது போராட்டம் பெருத்து விட்டது. ஒட்டு மொத்த இந்தியாவும் சுதந்திரத்துக்காக போராடுகிறது. காந்தி அகிம்சா வழியில் சென்றாலும், நோதாஜிபோன்றவர்கள் தீவிர வாதத்தினை கையில் எடுக்கிறார்கள். எனவே இளைஞர்கள் தீவிர வாதத்தினை கையில் எடுக்க ஆரம்பித்து விட்டனர்.
வெள்ளைக்காரர்கள் எண்ணிக்கையில் குறைவுதான். நமது மக்களை வைத்து தான் அவன் காவல் செய்கிறான்.அனைவரும் வெள்ளக்காரனுக்கு விஸ்வாசமாக இருக்கிறார்களா என்று தெரியவில்லை. எனவே அவர்களை நம்பி பெரிய அளவில் நடவடிக்கை எடுக்க முடியாது.
ஆனாலும் கொலை செய்தது தவறு. கொலை செய்தவன் எவனாக இருந்தாலும் அவனை கைது செய்ய வேண்டியது தான். தப்பி ஓடியவர்களின் உறவினர்கள், பெற்றோர்கள் என தாக்கினால், குற்றவாளிகள் வந்து சிக்கிகொள்வார்கள். அதை விட்டு விட்டு அப்பாவியை தாக்கினால், அப்பாவி எல்லாம் வெகுண்டு எழ ஆரம்பித்து விடுவார்கள். அப்படியென்றால் யாரைகாப்பாற்றுவது.
சுதந்திர போராட்ட வீரர்கள் போரட்டத்தில் உறுதியாக இருக்கிறார்கள்.
அனைத்து போலிசாரையும் கூப்பிட்டார் பிள்ளை.
“இங்கே பாருங்க மேன். இதுபோன்ற சில்லறைகள் அங்காங்க வாருவாங்க. அவங்க முக்கியமில்லை. லோன் துரை கொலை வழக்கில் சிலர்தான் கைதாகி இருக்கிறார்கள். மற்றவர்கள் கைதாகணும். முதலுல அவர்களை தேடுங்கள். அவர்களோட பெற்றோர்கள் உறவினர்கள் நண்பர்கள் என யார்கிடைத்தாலும் கொண்டு வாருங்கள். அதை விட்டுட்டு மற்றவர்களை துன்புறுத்தாதீங்க”
காவலர்கள் அமைதியாக இருந்தனர்.
அவர்களுக்கு போலீஸ் ஸ்டேசனை சூறையாடி, காவரை தாக்கிய இளைஞர்களை பிடிக்க வில்லை என்ற ஆதங்கம் இருந்தது.
ஆனாலும் போலிசார் தலையசைத்தனர். “இங்கே பாருங்க. நாமா இங்க கையில கிடைச்சவங்க சித்திரைவதை செய்யுறோம். ஆனா கொலையாளியை எங்க பிடிக்கப்போறோம்”.
“போலிசாருக்கும் கொஞ்சம் பயம் கொடுத்தது. குடிமக்கள் எதிர்த்து தாக்க ஆரம்பித்து விட்டனர். அவர்களிடம் பயம் இல்லை. நாளைக்கு தன்னந்தனியாக மாட்டிக்கொண்டால் நமது நிலமையையும் அதே நிலைமைதான் என பயத்துடன் இருந்தனர்”.
“சரி. போய் கொலையாளியை தேடுங்க”
“சரி தேடுவோம்”.
போலீஸ் படை கிளம்பியது.
கைதாகாமல் இருந்த வீரர்களின் பெற்றோர்களும், உறவினர்களும் மீண்டும் காவல் நிலையம் கொண்டு வரப்பட்டனர்.
தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வந்த காரணத்தால் ஒவ்வொரு கைதிக்கும் தகவல் பறந்தது.
இனி இப்படி இருந்தால் சரியாக இருக்காது. போலிசில் சரண்அடைந்து விடுவோம் என முடிவுசெய்தனர்.
ஆனால் எப்படி சரண் அடைவது என யோசித்துக் கொண்டிருந்தனர்.
அதே வேளையில் கைது செய்யப்பட்ட கொலையாளிகளை அடையாளம் காட்ட உப்பளத்தில் இருந்து சாட்சிகள் வரவழைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் வரிசையில் நிறுத்தப்பட்டனர். இவர்களை அடையாளம் காட்ட ஒவ்வொரு சாட்சிகளும் கொண்டு வரப்பட்டனர்.
சாட்சிகள்அனைவரும் உள்ளூர்கார்கள்.
அவர்களுக்கு லோன் துரையை கொன்ற குற்றவாளிகளை காட்டிக்கொடுக்க மணம் இல்லை. அதோடு மட்டுமல்லமல் அவர்கள் மனதிலும் கூட வெள்ளைக்காரனை துறத்த வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது.
எனவே மௌம் காத்தனர்.
“எஜமான் இதில இருக்கிறவங்க யாரும் லோன்து¬ கொலை செய்யப்படும் போது நாங்க பாக்கலை “என உறுதியாக சொன்னார்கள்.
டெப்டி சூப்ரின்டென்ட் ராவ்பகதூர் டி.எம்.அப்பாத்துரை பிள்ளைக்கு தெரியும் “வந்தவனுவ எல்லோரும் பொய் சொல்லுறானுவன்”.
இந்த பயலுவ சொந்தகாரனுவளை காட்டி கொடுக்க பயப்படுறானுவ. முதலுல இவனுவளை விசாரிக்கணும்.
அடையாளம் காட்ட வந்த அந்த 6 சாட்சிகளை தனி அறையில் சந்தித்தார்.
“இங்க பாருங்கடே. நானும் உள்ளூர் காரன் தான். எனக்கும் நம்ம நாடு சுதந்திரம் அடையணுமுன்னு ஆசை இருக்கு. ஆனா ஒருத்தனை கொலை செய்றது எவ்வளவு தப்பு. அந்த கொலையாளியை காட்டி கொடுக்காம இருந்தா அதை விட தப்பு”.
அனைவரும் அமைதியாக இருந்தார்கள்.
“இந்த பயலுவத்தான் கொலை செஞ்சாணுவன்னு நல்லா தெரியும். நீங்களும் அந்த இடத்தில அவனுவளை பார்த்து இருக்கிய. பொறவு ஏண்டே தெரியலைன்னு சொல்றீய”.
“இல்லை எஜமான் அங்க வந்தவனுவ இவனுவ மாதிரி தெரியலை”.
“ஏடேய் பொய் சொல்லாதீங்க. உங்களுக்கு தெரியாம இருக்காது. ஆமா”.
“இல்லை எஜமான். நீங்க சொல்ற மாதிரி இல்லை. இவனுவளை நாங்க பாக்கவே இல்லை”.
கோபமடைந்தார் பிள்ளை. “சரிடே. நீங்க போங்க”.
மறுநிமிடம் காவலர்களை அழைத்தார்.
“இந்த பயலுவ யாரும் காட்டிக்கொடுக்க மாட்டானுவ. முதலில இவனுவத்தான் குற்றவாளின்னு உறுதிபடுத்தனும். நல்ல வேளை இங்கே சரின்னு தலையாட்டிட்டு கோர்டுல வந்து கைவிரிக்காம போயிட்டானுவ. அதனால இவனுவ சாட்சி சொல்லா இருக்கிறது ஒரு வகைக்கு நல்லது தான். பேசாம நம்ம சைடுல சாட்சியை ரெடி பண்ணுங்க. அப்பத்தான் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்க முடியும்”.
“சரி” என தலையசைத்தனர் காவலர்கள்.
மறுநிமிடம் அதற்கான வேலை நடக்க ஆரம்பித்தது.
கைதுசெய்யப்பட்டவர்கள் முதன்முதலில் திருச்செந்தூர் சிறையிலும் பின்னர் வெவ்வேறு சிறையிலும் சிறை வைக்கப்பட்டனர். அது ஒரு தனிக்கதை
******
திருச்செந்தூர், குலசேகரபட்டினம், உடன்குடி பகுதியே பரபரப்பாக இருந்த சமயம் மேகநாதனோ, ஊரை விட்டு வெகு தூரம் சென்று இருந்தான்.
மேகநாதன் இருந்தால் தானே இந்த குற்றவாளிகளுக்கு உதவ முடியும். அவர்களை இழந்து வருமானம் இன்றி தவிக்கும் அவர்களது குடும்பத்தை காப்பாற்ற முடியும். இவன் இங்கே இருந்தால் அந்த வேலையை செய்வான் என போலிஸ் மேகநாதனை விரட்டி விட்டு விட்டது. அவனும் ஒடி ஒளிந்து கொண்டிருக்கிறான்.
சித்தன் விளை பெரிய நாடாருக்கு பெரிய தலை குனிவு தான். அவர் போலிசில் பிடிப்பட்டார் ஆனால் வழக்கில் இருந்து தப்பித்து விட்டார். கொலையாளிக்கும் தனக்கு எந்ததொடர்ப்பு இல்லை என நிருபவித்து விட்டார். ஆனால் மனசாட்சியோ அவரை படாத பாடு படுத்தியது. எனவே அவர் தொடர்ந்து கொலையாளிகளுக்கு உதாவாமல் அமைதியாக இருந்து விட்டார்.
இதனால் கொலையாளிகளுக்கு வெளி உதவி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டிருந்தது.
மேகநாததேனா கரூர் வழியாகத் திருவண்ணாமலைக்குச் சென்றான்.
அங்குப் புரசை முருகேசன் முதலியாரைச் சந்தித்தான். அவரும் சுதந்திர போராட்ட வீரர்தான். அவரிடம் நடந்ததையெல்லாம் கூறினான்.
முதலியார் அவனை கனிவோடு பார்த்தார்.
“ஆகா எவ்வளவு பெரிய காரியம் செஞ்சு இருக்க. திருச்செந்தூர் முருகன் போலவே நீ எனக்கு தெரியுத. உன்னை நான் சும்மா அழைத்துச்செல்லக்கூடாது வா” என அவனுக்கு பாத பூஜை செய்தார்.
அதன் பின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
மதிய உணவு கொடுத்தார். அன்று இரவு வீட்டில் நிம்மதியாக தூக்க சொன்னார்.
காலை எழுந்தவுடன் அவனுக்கு வேண்டிய உதவி செய்து அங்கிருந்து வழியனுப்பி வைத்தார்.
“இங்கே பாரு மேகநாதா. கொஞ்ச நாள் நீ ஒரே இடத்தில இருக்காத. நீ வெளியே இருந்தா தான் எல்லோருக்கும் நல்லது. போலிசுகிட்ட மாட்டிக்கிட்ட அவ்வளவுதான் எல்லாமே நாசமாக போயிடும். அதனால தைரியமா கிளம்பு. கரூர் போலிசு என் வீட்டை நேத்தே நோட்டம் போட்டுட்டாங்க. அநேகமா இன்னைக்கு உன்னை கைது செய்ய வந்தாலும் வருவாங்க. அதுக்குள்ள நீ இங்க இருந்து கிளம்பிரு”.
“சரி அய்யா”. போலிசிடம் மாட்டிவிடக்கூடாது எனவே அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானான் மேகநாதன்.
எந்த வாகனத்திலும் அவன் ஏறவில்லை.
சாதாரண நடைபாதையில் நடந்து செல்லும் உள்ளூர் மனிதர் போலவே நடக்க ஆரம்பித்தான்.
இவன் நடைபயணம் ஆரம்பித்து 15 நிமிடம் இருக்கும் போலிசார் முதலியார் வீட்டுக்கு வந்தனர்.
முதலியாரிடம் விசாரித்தார்கள்.
“அவன் யார் என்று எனக்குதெரியாது. தூத்துக்குடியில் இருந்து வந்தேன். கையில் இருந்த பணம் தொலைஞ்சு போச்சு. எனக்கு ஊருக்கு போக பணம் தாங்கன்னு கேட்டான். பாக்க பாவமா இருந்துச்சு. கொடுத்து அனுப்பிட்டேன். அநேகமாக ஊருக்கு பஸ் ஏறி இருப்பான்”. என கூறினார்.
போலீஸ் படை சிந்தனை திசைதிரும்பியது. அவர்கள் கரூவூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் பேருந்தில் மேகநாதனை தேடினார்கள். அங்கிருந்து செல்லும் ரயில் வண்டியிலும் மேகநாதனை தேடினார்கள்.
அங்கிருந்து செல்லும் வாகனத்திலும் தேடினார்கள்.
அவன் கிடைக்கவில்லை.
ஆனால் எந்த பிரச்சனையில் இல்லாமல் மேகநாதன் திருப்பதிக்கு நடந்தே சென்றான்.
திருப்பதியில் மொட்டை போட்டான். அதன் பின் ஏழுமலையானை தரிசித்தான். அதன் பின் என்ன செய்யலாம். எப்படி நமது மக்களை காப்பாற்றாலாம் என யோசனை செய்தான்.
இனி இங்கிருந்து பிரயோசனம் இல்லை. சென்னைக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்தான்.
தொடர்ந்து சென்னைக்கு கிளம்பினான்.
அங்கே தான் இராஜாஜியை சந்தித்தான்.
அவர் இவனை மேலும் கீழும் பார்த்தார்கள்.
குள்ளம், நல்ல நிறம், தென்னகத்தில் உள்ளவர்களோ இதுபோன்ற நிறத்தில் இருக்கமாட்டார்கள். பெரிய பணக்காரன் தான். எனவே அவன் முகத்தில் வறட்சி தெரியவில்லை.
அவனை கூர்ந்து கவனித்தார் ராஜாஜி. அவரிடம் மூச்சுக்கு மூச்சு, லோன் துரை கொலை வழக்கு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காப்பாற்ற வேண்டும் என பேசினான்.
அவருக்கு மேகநாதன் மேல் நாட்டம் இல்லை.
குள்ளமாக வித்தியாசமாக இருந்த அவனை வெளியே அனுப்பவும் தயாராக இல்லை. அதுவும் இது தூத்துக்குடி பகுதியில் உள்ள பிரச்சனை. எனவே அவரது நண்பர் எம்.சி. வீரபாகு பிள்ளையிடம் மேகநாதனை அனுப்பினார்.
சென்னையிலுள்ள எம்.சி.வீரபாகுபிள்ளையின் அறைக்குச் சென்றேன். மேகநாதன் பற்றி எல்லாவற்றையும் கேட்டு அறிந்தார். இப்போதைக்கு மேகநாதனை காப்பாற்ற வேண்டும். அதன்பிறகு லோன் துரை கொலைவழக்கு கைதிகள் பற்றி யோசிக்கலாம்.
இவன் போலிசில் மாட்டி விடக்கூடாது. இவன் வெளியே இருந்தால் தான் பல உதவிகள் செய்யமுடியும்.
இதற்கிடையில் மிக முக்கிய நபர்கள் மூலம் மேகநாதனை பற்றி அறிந்து கொண்டார். மேகநாதன் மீது போலிசார் மிகவும் கோபமாக இருக்கிறார்கள். அப்படியென்றால் இவனை முதலில் காப்பாற்றவேண்டும்.
“இங்க பாரு மேகநாதா. நீ கொஞ்ச நாள் இங்கே இருக்க வேண்டாம். என் உறவு காரர் ஒருவர் கல்காத்தாவில் இருக்கிறார். அவரிடம் அனுப்புகிறேன். கொஞ்ச காலம் அங்கே இரு. அதன் பிறகு உன்னை அழைத்துக்கொள்கிறோம்” என்றார்.
மேகநாதனுக்கு எல்லோரையும் விட்டு விட்டு செல்வது பிடிக்க வில்லை. அமைதியாக இருந்தான்.
“என்ன மேகநாதா அமைதியா இருக்க”.
“எல்லோரும் என்னை விரட்ட பாக்கிறீங்க”.
“சூழ்நிலை அப்படி இருக்கு. நீ தான் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தன்னு உறுதியாகி இருக்கு. நீ இப்போ அவங்க கையில கிடைச்ச அவ்வளவு தான்”
“என் மண்ணை சுரண்டியவனை விரட்ட, என் மக்கள் செய்ய யாகம் தான் லோன் துரை கொலை. அந்த தியாகிகளை காப்பாற்ற முயற்சிக்காமல் வெளியே இருந்து வேடிக்கை பார்க்கும் நிலை ஏற்பட்டு விட்டதே”.
“இங்கே பாரு. நம்ம தலைவர்கள் எல்லோரும் அவர்களை காப்பாற்ற வேண்டும் என உறுதியாக இருக்கிறார்கள். உன்னோட உதவியும் எங்களுக்கு தேவை . ஆனா தயவு கூர்ந்து கொஞ்ச நாளைக்கு நீ வெளியே இரு”.
அமைதியாக இருந்தான் மேகநாதன்.
“நீ சென்னைக்கு வந்துட்டன்னு கூட போலிஸ் மோப்பம் பிடித்து இருப்பாங்க. இன்னும் நிறைய குற்றவாளி பிடி படலை. ஒரு வேளை உன்னை பிடிச்சா அவ்வளவு பேரும் சரண் ஆயிடுவாங்கன்னு போலிசு நினைக்கலாம். அதனால கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது”.
“என்ன செய்யலாம்-”.
“அதாம் சொன்னேம்முலா. நீ கொஞ்ச காலம் கொல்காத்தா போ” என்றார்.
வேறு வழியில்லாமல் வீரபாகு பிள்ளை சொல்வதை ஆமோதித்தான். எனவே கொல்காத்தா கிளம்ப ஆயத்தமானான் மேகநாதன்.
சொந்த மண்ணில், போராளிகள் விரட்டப்படுகிறார்கள். அவர்களுக்கு உதவலாம் என உறுதியோடு இருந்தால், நமது நிலமை அதற்கு மேல் இருக்கிறது.
இருக்கட்டும். போலிசில் மாட்டி விடக்கூடாது-. நாம் வெளியே தான் இருக்க வேண்டும். வெளியே இருந்தால்தான் நாம் மற்றவர்களை காப்பாற்ற முடியும். அப்படியென்றால் இப்போது பிள்ளை சொல்வதை கேட்கத்தான் வேண்டும்.
மேகநாதன் பிள்ளை சொல்வதை கேட்கத் தயாரானார்.
அவர் மேகநாதனை காரில் அழைத்துக் கொண்டு திருப்பதிக்கு வந்தார்.
அங்கிருந்து இரயில் மூலம் கல்கத்தாவிற்கு அனுப்பினார். அதற்கு காரணமும் இருந்தது. வீரபாகுபிள்ளையின் மைத்துனர் கல்கத்தாவில் இருந்தார்.
இவர் வருகிறார் என தந்தி அடித்த காரணத்தினால் ரயில் நிலையத்துக்கு அவர் வந்து கூட்டிச்சென்றார்.
அவர் நடத்தி வந்த கடையின் பெயர் ‘ஜெயா ஸ்டோர்’ . அந்தக் கடையில்தான் தங்கினான் மேகநாதன்.
புது இடம். புது மொழி. புது கலாச்சாரம். ஆனால் அவருடன் தங்கியிருந்தவர்கள் தமிழ் பேசினார்கள். தமிழ் உணவு கிடைத்தது. பெரிய அளவில் அந்நியம் தெரியவில்லை.
கொஞ்சம் வெறுமையாக இருந்தாலும் தொடர்ந்து பணிகளை செய்து கொண்டிருந்தான்.
அவர் மணக்கண் முன்னால் குலசேகரபட்டினம் வந்து சென்று கொண்டே இருந்தது.
என்ன செய்வது எப்படி அவர்களை காப்பாற்றுவது.
தள்ளு வண்டி மூலம் சாமான்களை ‘டோர் டெலிவரி’ செய்யும் வேலை. மனம் இல்லாமல் அந்த வேலையை செய்து கொண்டிருந்தான்.
அதே வேளையில் குலசேகரபட்டினத்தில் கொலையாளிகள் ஒருவர் பின் ஒருவராக போலிசிடம் கைது செய்தார்கள்.
(குலசேரபட்டிணம் கொலை வழக்கு தொடரும்)


