ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் யோகா தின விழா நடந்தது. துணை வட்டாட்சியர் லோகநாதன் தலைமை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்றார்.

முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் சங்கர் கணேஷ், வருவாய் ஆய்வாளர் பேச்சியம்மாள், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக், ஜோஸ் பள்ளி தாளாளர் ரஹ்மத், சிவகளை மாணிக்கம், யோகா ஆசிரியர்கள் சுவாமிநாதன், அமிர்கனி, எழுத்தாளர் மணிமொழிச் செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மத்திய தொல்லியல் துறை பொறியாளர் உமேஷ் தலைமையில் முதுநிலை பராமரிப்பாளர் சங்கர், ஜோதிஸ், ராஜா, சீத்தாராமன் ஆகியோர் செய்திருந்தனர். பொறியாளர் உமேஷ் நன்றி கூறினார். சைட் மேற்பார்வையாளர் வெங்கடேஷ், அந்தோணி, ஜெயபிரதா, அபிலாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்


