நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பாசன குளங்கள் மூலைக்கரைப்பட்டியை சுற்றி 6 உள்ளது. இந்த குளங்கள் கரையை மேம்படுத்தவேண்டும் மற்றும் தூர் வாரவேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நீண்ட நாள் கோரிக்கை வைத்தனர்.
இந்த குளத்தினை தனியார் பங்களிப்புடன் தூர்வார மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யதது. அதன் படி ஹெல்ப் கிட்ஸ் நிறுவனம், ஷீட் டிரஸ்டு , எக்ஸ்னரோ இன்டர் நேஷனல் பவுண்டேசன் இணைந்து இந்தபணியை துவங்கியது. இதற்காக கோமாட்சு நிறுவனத்தில் வாடகை இல்லா இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இதன் துவக்க விழா தான்தோன்றி குளத்தில் வைத்து நடந்தது.
இந்த பணி துவக்க விழாவில் ஷீட் டிரஸ்டு டாக்டர் பொன்னம்பலம் வரவேற்றார். மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி தலைவர் பார்வதி தலைமை வகித்தார். மணிமுத்தாறு பிரிவு அலுவலக பொறியாளர் நவீன், மருத்துவர்கள் ராஜசங்கர், வனிதா மற்றும் ராஜா சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எக்ஸ்னோரா தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, மூலைக்கரைப்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஆவுடையப்ப குருக்கள் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
ஹெல்ப் கிட்ஸ் அறக்கட்டளை தலைவர் ராம்குமார் சிறப்பு விருந்தினராக கலந்தகொண்டு பணியை கொடியசைத்து துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஹெல்ப் கிட்ஸ் நிறுவன புஷ்கலா, முகைதீன், டேனியல், சமூக ஆர்வலர் செல்வகுமார், குமார் , உஷாராணி, குமார், முகமது அலி உள்பட பலர் கலந்துகொண்டனர். என்ஸ்னோரா இன்டர்நேஷனல் திருநெல்வேலி மேனேஜர் முருகன் நன்றி கூறினார். இதில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு இயற்கையை பாதுகாக்க உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது
இரண்டு மாதத்தில் தான்தோன்றி குளத்தின் பணியை முடித்து விட்டு, அடுத்த குளத்து பணியை துவங்க நடவடிக்கை எடுக்க படும் என தூர் பணி குழுவினர் தகவல் தெரிவித்தனர். இதனால் இந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


