தூத்துக்குடியில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்குக் காலை உணவு வழங்கப்பட்டது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி தலைமையில் சிதம்பர நகரில் அமைந்துள்ள ‘பாசக்கரங்கள்’ முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்குக் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி தலைவர் ஜெயக்கொடி இதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்திருந்தார். இந்நிகழ்வில் வடக்கு மாவட்டத் துணைத் தலைவர் பெத்துராஜ், மாநகரச் செயலாளர் இக்னேசியஸ், மீனவரணி மிக்கேல் குரூஸ், பழங்குடியினர் பிரிவுத் தலைவர் முனியசாமி, மகிளா காங்கிரஸைச் சேர்ந்த தனலட்சுமி, இசக்கியம்மாள், ஜெஸ்ஸி மற்றும் கட்சி நிர்வாகிகள் செல்வமுருகன், முருகேசன், எஸ்.எம்.டி.சுந்தர்ராஜ், சாந்தகுமார், பாலகிருஷ்ணன், காமராஜ், மாரியப்பன், முத்துராஜ், தெர்மல் முத்து, ஷேக்ஸ்பியர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


