ரோட்டரி கிளப் ஆப் பாளையங்கோட்டை சார்பில் தாமிரபரணி ஆற்றை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திடும் நோக்கத்தில் கருங்குளம் ஆற்றுப்பாலத்தில் விழிப்புணர்வு சுவர் விளம்பரம் அமைக்கப்பட்டது. இந்த சுவர் விளம்பரத்தை சங்கத் தலைவர் மாரியப்பன் எழுதி அமைத்திருந்தார். இதனை முன்னாள் உதவி ஆளுநர் மயில் பாலசுப்பிரமணியன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் உதவி ஆளுநர் பாலமுரளி காமராஜ், முன்னாள் செயலாளர் ராகு சுந்தர், முன்னாள் தலைவர் ஜெய்சன், ஆரோன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி சென்ட்ரல் தலைவர் பிரபாகர் ஜேம்ஸ், கருங்குளம் ஊராட்சி செயலாளர் சங்கரபாண்டியன், கருங்குளம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜஸ்டின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தாமிரபரணி ஆற்றை பாதுகாப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தினர். நிகழ்ச்சியை சங்கப் பொருளாளர் மாசான முத்து தொகுத்து வழங்கினார்.


