தூத்துக்குடியில் ஒருமுனை தீர்வுக்குழு கூட்டம் மற்றும் நீட்ஸ், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டங்களுக்கான நேர்முகத் தேர்வு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம், தூத்துக்குடி மூலம் செயல்படுத்தப்படும் ஒருமுனை தீர்வுக்குழு கூட்டம் மற்றும் நீட்ஸ், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டங்களுக்கான நேர்முகத் தேர்வு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புதிய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொடங்குவதற்காக ஒற்றை சாளர இணையதளத்தில் அனுமதி/உரிமங்களுக்காக பதிவு செய்யப்பட்டுள்ள அரசுத்துறையில் நிலுவையிலுள்ள 23 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட அரசுத்துறைகளுக்கு விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்வில் நீட்ஸ் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகள் மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 11 பயனாளிகள் பல்வேறு தொழல்கள் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் பெறுவதற்காக கலந்து கொண்டனர்.
இத்திட்ட பயனாளிகளை தேர்வு செய்வதற்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மற்றும் நேர்முகத் தேர்வு குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம் திருமதி ஸ்வர்ணலதா, முன்னோடி வங்கி மேலாளர், தொழில் நிறுவன பிரதிநிதிகள், வங்கியாளர்கள் மற்றும் அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


