கிளாக்குளத்துக்கு இயங்கும் அரசு பேருந்தைமுறையாக இயக்க வேண்டும் என சரவணன் எம்.எல்.ஏ விடம் கிளாக்குளம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.எ அலுவலகத்தில் நேரில் அவரை சந்தித்துஅவர்கள் கொடுத்த மனு விவரம் வருமாறு.
கருங்குளம் அருகே கிளாக்குளம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 300க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பான்மையான மக்கள் விவசாயம் மற்றும் பனை தொழில் செய்து வருகின்றனர். இந்த கிராமத்து மக்கள் அத்தியவாசிமான வேலைகள் மற்றும் பள்ளி கல்லூரி படிப்புக்கு கிராமத்தினை விட்டு வெளியே வரவேண்டியது உள்ளது. பாளையங்கோட்டையில் பெரும் பான்மையான மாணவர்கள் படிக்கிறார்கள். முதியோர்கள் மற்றும் பெண்கள் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்குத்தான் வர வேண்டியது உள்ளது. இந்த கிராமத்துக்கு காலை 6.30 மணிக்கும் மாலை 7.30 மணிக்கு மட்டுமே இரண்டு முறை அரசு பேருந்து வருகிறது. இந்த பேருந்தும் முறையாக வருவது இல்லை. எங்கள் கிராமத்துக்கு என காலை முதல் மாலை வரை தனியாக ஒரு பேருந்தை முழு நேரம் இயக்கி தர ஆவண செய்ய வேண்டுகிறோம் என்று அந்த மனுவில் கோரியிருந்தனர்.
விரைவில் கிளாக்குளம் கிராமத்துக்கு முழுநேர பேருந்து இயங்கும் என பொதுமக்கள் ஆவலுடன் உள்ளனர்.


