கோவில்பட்டி புதுரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் திருக்குறள் புத்தகங்கள் வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் ஜுன் 4ம் தேதி துவங்கப்பட்டுள்ள நிலையில் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கோவில்பட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளி முதலாம் வகுப்பு புதிய மாணவர்களுக்கு ரோஜாப்பூ மற்றும் கடலை மிட்டாய் வழங்கியும் 6,7,8ம் வகுப்பு மாணவர்களுக்கு 100 திருக்குறள் புத்தகங்கள் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் மாணவர்கள் குறள் வழி நடக்கவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமரன் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் முத்துச்செல்வம், ரோட்டரிசங்கதுனைத் தலைவர் முத்து முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரோட்டரி சங்க செயலாளர் பழனிகுமார் அனைவரையும் வரவேற்றார். கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு ரோஜா பூ மற்றும் கடலை மிட்டாய் திருக்குறள், பாடப் புத்தகங்களை வழங்கி வரவேற்று பேசினார். இதில் ரோட்டரி சங்க உறுப்பினர் இளங்கோ,பள்ளி ஆசிரியர்கள் பாலாஜி, பொன்மலர் பாரதி,பிருந்தாதேவி உள்பட ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ் ஆசிரியர் மீனா நன்றி கூறினார்.


