தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலர் கணேசனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா கோவில்பட்டி தங்க மஹாலில் நடந்தது.
இடைசெவல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விற்பனையாளர் பணி முதல் செயலர் பணி வரை 39 ஆண்டுகள் பணிபுரிந்து பணி நிறைவு பெற்ற கணேசனுக்கு பணி நிறைவு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார்.
மாவட்டத் துணைத் தலைவர் வேல்ராஜ்,பொருளாளர் தம்பிராஜ்,மாவட்ட இணை செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க கௌரவ பொது செயலாளர் ஜேசுராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணி நிறைவு பெற்ற கணேசனுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.பணி நிறைவு பெற்ற இடை செவல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் கணேசன் ஏற்புரை வழங்கினார்.
இதில் கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள்,கூட்டுறவுத்துறை அலுவலர்கள், தணிக்கை துறை அலுவலர்கள், ஓய்வு பெற்ற சங்க பணியாளர்கள், பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள், இடைசெவல், சத்திரப்பட்டி, மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானார் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில்பட்டி,கயத்தார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்


