10.05.2026 அன்றைய தினத்தந்தி நாளிதழில், முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய ‘நீர்மம்’ நாவல் குறித்த புத்தக மதிப்புரை வெளிவந்துள்ளது.
இதனை வெளியிட்ட தினத்தந்தி நிர்வாகத்திற்கும், ஆசிரியர் குழுவிற்கும் மனமார்ந்த நன்றிகள்.
— முத்தாலங்குறிச்சி காமராசு
நூல் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள:
நாற்கரம்: 95510-65500, 87609-70002
விலை: ₹280/-
விமர்சனம்:
வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறு, மணல் கொள்ளையர்களாலும், கழிவுநீர் கலப்பாலும், பாபநாசத்தில் பக்தர்கள் விட்டுச் செல்லும் ஆடைகளாலும் எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை இந்த நாவல் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
தாமிரபரணி ஆற்றைக் காக்கப் போராடும் ஒரு ஆணும் பெண்ணும் காதலர்களாக மாறுவதும், நதியைக் காப்பாற்றிய பிறகே தம்பதியராக இணைவோம் என்று அவர்கள் உறுதி கொள்வதும், அவர்களின் இந்தப் போராட்டத்திற்கு ஒரு பெரியவர் உறுதுணையாக இருப்பதும் என கதை நகர்கிறது.
யதார்த்தமான உரையாடல்கள், விறுவிறுப்பான கதைப்போக்கு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் என இந்த நாவல் வாசகர்களை ஈர்க்கிறது. குறிப்பாக, நாவலின் இறுதிப் பகுதி நெஞ்சைத் தொடும் வகையில் அமைந்துள்ளது


