மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒன்றிய அரசு புதிய திருத்த செய்துள்ளது வேலை செய்யும் பணியாளர்களுக்கு கண் விழியை புகைப்படம் எடுத்து பதிவு செய்தால் மட்டுமே 100 நாள் வேலையில் பணிபுரிய வழிவகை உள்ளது ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு பெரும் துன்பத்தை தருகிறது கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி கண் விழி புகைப்படத்தில் விழுந்தால் மட்டுமே 100 நாள் வேலை பார்க்க முடியும் அல்லது வேலை கிடையாது என்ற சூழ்நிலை உள்ளது மாற்றுத்திறனாளிகள் 100 நாள் வேலை மற்றும் அரசு வழங்கக்கூடிய உதவித்தொகை வைத்து உயிர் வாழ சூழ்நிலை உள்ளது ஆனால் தற்போது 100 நாள் வேலை கிடைக்காததால் கஷ்டப்படும் சூழ்நிலையில் உள்ளனர் ஆகையால் இது போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து தர தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்


