தூத்துக்குடி அருகேயுள்ள செபத்தையாபுரம் தெய்வீக உயிர்த்தெழுதலின் ஆலயத்தின் 120-வது அசனப் பண்டிகை விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான இறைமக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
அசனப் பண்டிகையை முன்னிட்டு, அதிகாலையில் சிறப்புப் பண்டிகை ஆராதனை மற்றும் திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல உப தலைவர் மோசஸ் ஜெபராஜ் இதில் கலந்துகொண்டு நற்செய்தி வழங்கினார். ஆராதனையைத் தொடர்ந்து அசனப் பணிகள் தொடங்கப்பட்டன.
மாலையில் நடைபெற்ற அசன விருந்து நிகழ்ச்சியில் அசன விருந்து தாமஸ், ஆரம்ப பள்ளி மேலாளர் தேவராஜன், ஆடிட்டர் ஜெபச்சந்திரன், பெருங்குளம் பேருராட்சி மன்ற தலைவி டாக்டர் எஸ்.புவனேஸ்வரி சண்முகநாதன், உயர்கல்வி நிலைவரக் குழு செயலாளர், ஜெபர்சன் சாமுவேல்ராஜ், செல்வின்ராஜ் சார்லஸ், அற்புதராஜ், ஆனந்தமணி, குலையன்கரிசல் அபிஷேக நாதர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் அருண் ஜெபக்குமார் மற்றும் மால் சொர்ணபாண்டியன், தொழிலதிபர் ராஐபிரபு, சாயர்புரம் நகர கழக செயலாளர்துரைச்சாமி ராஐா, மாவட்ட விவசாய அணித் தலைவர் சுதர்சன் ராஐா திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்
ஏற்பாடுகளை சபை மன்ற தலைவர் – ஜான் வெஸ்லி சேகர தலைவர் செபத்தையாபுரம்.சபை தலைவர் ரோச், சபை செயலாளர் ஜவஹர், தங்கதுரை, சபை ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ், சபை பொருளாளர் மற்றும் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் டாக்டர் பிரகாஷ் ராஜ்குமார், துணை பொருளாளர் மனோ முத்தரசன், சாந்த சீலன்,எமில் டேவிட், சோபன் பாலசிங், சாந்தசிங், வின்சென்ட் ராவ், பிரபாகா, மகாராஜ் குமார், கோயில்ராஜ், ஸ்டீபன் ஜெயராஜ், ஞானமணி, ஜான் மோசஸ், சிபி செல்டன், அருண் மற்றும் ஆபிரகாம் ஆகியோர் செய்திருந்தனர்.


