தேர்தல் விதிமீறல் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் பார்வையாளர்களிடம் நேரிடையாக புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தல் தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் பார்வையாளர்களிடம் நேரிடையாகவும், அலைபேசி வாயிலாகவும் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதிகள், வேட்பாளர்களின் செலவினங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்குப் பணிகளைக் கண்காணிப்பதற்காக இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கீழ்க்கண்ட பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்:
விளாத்திகுளம் மற்றும் தூத்துக்குடி தொகுதிகள்:
எலுச்சூரி ரத்னாகர ராவ் (தேர்தல் பொதுப் பார்வையாளர்)
அலைபேசி எண்: 73972 52344
திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தொகுதிகள்:
சோடிங்புயீ (தேர்தல் பொதுப் பார்வையாளர்)
அலைபேசி எண்: 73050 82344 | மின்னஞ்சல்: zoding.puii@mizoram.gov.in
ஓட்டப்பிடாரம் (தனி) மற்றும் கோவில்பட்டி தொகுதிகள்:
அர்விந்த் குமார் வர்மா (தேர்தல் பொதுப் பார்வையாளர்)
அலைபேசி எண்: 72007 52344 | மின்னஞ்சல்: secu_cabsec@bihar.gov.in
மாவட்டத்தின் அனைத்துத் தொகுதிகளுக்கும் (காவல் பார்வையாளர்):
ஹிர்மத் சுதிர் கல்யா,
அலைபேசி எண்: 73389 72344 | மின்னஞ்சல்: sudhirhiremath@gmail.com
தேர்தல் தொடர்பான விதிமீறல்கள் குறித்துப் பொதுப் பார்வையாளர்களை நேரில் சந்தித்துப் புகார் அளிக்க விரும்புவோர், தினமும் காலை 11:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை கீழ்க்கண்ட முகவரியில் சந்திக்கலாம்:
முகவரி: ஸ்பிக் – சாஹர் சதன் கூட்டரங்கம் (SPIC – Sagar Sadan), முத்தையாபுரத்திலிருந்து புதிய துறைமுகம் செல்லும் சாலை, தூத்துக்குடி.
பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் தொடர்பான புகார்களை மேற்கண்ட அலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரிகள் வாயிலாகத் தெரிவித்து, அமைதியான முறையில் தேர்தல் நடைபெற ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்


