தெற்கு காரசேரியில் காட்டுக்குள் மருத்துவ கழிவுகளை கொட்டிய மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
தெற்கு காரசேரி ஊருக்கு எல்கையில் காட்டுக்குள் கல்கோரி ஒன்று உள்ளது. அந்த கல்கோரியில் தோண்டப்பட்ட குழியை நிரப்ப பல லாரிகளில் மருத்துவ கழிவுகள் கொண்டு கொட்டப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் நடந்து செல்லும் பாதை அருகிலேயே கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்த ஊரை சேர்ந்த ஊய்காட்டான் கூறும்போது, எங்கள் ஊர் மக்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். விவசாய வேலை மட்டுமே செய்து வருகிறார்கள். எங்கள் ஊருக்கு மேற்கு பகுதியில் அடர்ந்த காடு உள்ளது. அந்த காட்டின் அருகில் கல்கோரி உள்பட பல தொழில்கள் நடைபெறுகிறது. இந்த தொழில் நடைபெறும் இடங்களில் கடந்த 10 நாள்களில் பல லாரிகளில் மருத்துவக் கழிவுகளை மர்ம நபர்கள் லாரியில் ª காட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்த பொருள்கள் சாக்கில் கட்டப்பட்டு மக்கிய நிலையில் உள்ளது. அருகில் செல்லும் போது துர்நாற்றம் வீசுகிறது. இதனால் எங்கள் கிராம மக்களிடையே நோய் பரவும் அபாய நிலைமை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக மருத்துவ கழிவுகளை கொட்டியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கொட்டிய மருத்துவ கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
கொட்டிய மருத்துவ கழிவில் இருந்து வரும் தூர் நாற்றத்தினால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


