தெற்கு காரசேரியில் அனுமதியின்றி நடந்த சாய பட்டறைக்கு ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன் சீல் வைத்தார்.
கருங்குளம் அருகில் உள்ள தெற்கு காரசேரியில் அனுமதியின்றி சாயாப்பட்டறை நடப்பதாகவும், அதனால் அதிகமான கழிவுகள் காட்டு பகுதியில் கலப்பதாகவும் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரனுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் தெற்கு காரசேரிக்கு சென்றார். அவருடன் முதுநிலை வருவாய் ஆய்வாளர் அய்யனார், கிராம நிர்வாக அதிகாரி முத்து சகுந்தலா, தெற்கு காரசேரி ஊராட்சி செயலர் சுரேஷ், தலையாரி சுந்தரம் ஆகியோர் உடன் சென்றனர்.
அங்கு அனுமதியின்றி சாயபட்டறை நடப்பது ஆய்வின் போது தெரியவந்தது . உடனே அந்த ஆலைக்கு தாசில்தார் சந்திரன் சீல் வைத்தார். கிராம நிர்வாக அதிகாரி முத்து சகுந்தலா கொடுத்த புகாரின் பேரில் சேரகுளம் போலிசார் அங்கு பணியாற்றியவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


