வல்லநாட்டில் காசநோயாளிகளுக்கு சத்துணவு வழங்கும் திட்ட துவக்க விழா நடந்தது.
துணை இயக்குனர் காசநோய் மருத்துவ பணிகள் டாக்டர் சுந்தரலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட நலக் கல்வியாளர் தங்கவேல் வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தரி, உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் அஸ்வினி ஜெனிபர் சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தார். வல்லநாடு காசநோய் பிரிவின் புது முயற்சியாக தனியார் துறை ஒருங்கிணைப்புடன் 10 ஏழை காசநாயாளிகளுக்கு சிசிச்சை காலம் முழுவதும் சத்துணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தாண சங்கர வேல் விளக்கவுரையாற்றினார். சித்த மருத்துவ மருந்தாளுநர் வெங்கடேசன், ஆய்வக நுட்பநர் தாமரை செல்வி சுகாதார பணியாளர வேம்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மாவட் காசநோய் மைய தீர்வு முறை அமைப்பாளர் குப்புசாமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரகீம் ஹீரா அவர்கள் செய்திருந்தார்.


