தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மாணவர் சங்கம் சார்பில், “மகளிர் மேம்பாடு” என்ற கருப்பொருளின் அடிப்படையில் சர்வதேச மகளிர் தின விழா கயல் கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவையொட்டி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன:
“பாரதி கண்ட பெண்ணுரிமை கனவு கனவேயானதா அல்லது நனவானதா?” என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. குழு நடனம், பாடல் மற்றும் ஊமை நாடகம் (Mime) போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மாலை 4 மணியளவில் நடைபெற்ற நிறைவு விழாவிற்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சீ.ஆ. சண்முகம் தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார்.
மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் பா. கணேசன் வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் முதல்வர் முனைவர் கே. பானுமதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரை வழங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கேற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவின் நிறைவாக, மாணவர் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் அ. ஜெய்பிரகாஷ் நன்றியுரை வழங்க, நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது


