கருங்குளம் ஒன்றியம் முத்தாலங்குறிச்சி ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஒட்டபிடாரம் எம்.எல். ஏ சண்முகையா கலந்துகொண்டு கட்டிடத்தினை திறந்து வைத்து புதிய தரை தள நீர்த்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டினார்.

முத்தாலங்குறிச்சி கிராமத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருந்தது. இதை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரி வந்தனர். இதற்கிடையில் எம்.எல்.எ உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் முத்தாலங்குறிச்சி தெற்க்கூரில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டிட நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டிருந்தது. இந்த இடத்தில் அடிக்கல் நாட்டவும் எம்.எல்-.ஏ சண்முகையா ஊருக்கு வருகை தந்தார். அவரை ஊர் பொதுமக்கள் சார்பில் முத்தாலங்குறிச்சி காமராசு நூல் கொடுத்து வரவேற்றார். பின் ஊராட்சி மன்ற புதிய கட்டிடத்தினை துவக்கி வைத்தார். அதன் பின் குத்துவிளக்கு ஏற்றினார். அதன் பின் பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். அப்போது ஊர் பொதுமக்கள் அம்மன் கோயில், தெற்கு ஊர் பகுதியில் பயணிகள் நிழற்கூடம் கட்டித்தரவேண்டும் என்றும், காமராஜர் தெருவில் கலையரங்கம் அமைத்த தரவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். அவர் ஆவண செய்வதாக வாக்களித்தார். அதன் பின் முத்தாலங்குறிச்சி தெற்கு ஊரில் 6 லட்சம் செலவில் கட்டப்பட உள்ள தரைதள நீர்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் திட்ட இயக்குனர் தேவேந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான்சி ராணி, ஆறுமுகநயினார், ஒன்றிய உதவிபொறியாளர் மாரியப்பன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கிராம நிர்வாக அதிகாரி கந்தசுப்பு, வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ராமசாமி, துணை செயலளார் சுரேஷ், ஊராட்சி செயலாளர் இசக்கி முத்து, முருகன் சங்கரபாண்டி, சோமு, காசி, மதுபாலா சுடலைமணி, ஒப்பந்த காரர் ராமையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


