செய்துங்கநல்லூர் புனித லூசியா ஆர்.சி. நடுநிலைப்பள்ளி 86 வது ஆண்டு விழா நடந்தது. மாவட்ட வன அதிகாரி இளையராஜா தலைமை வகித்தார். கிறிஸ்து ராஜா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கனீஸ் பீட்டர் , பள்ளி தளாளர் ஜாக்சன் அருள், கருங்குளம் வட்டாரக்கல்வி அலுவலர் முத்துகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை ஜெபமாலை மேரி வரவேற்றார். விளையாட்டு மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஊர் தலைவர் கனகராஜ் பூபாலராயர், விவசாயிகள் சங்கத் தலைவர் குமார், அப்துல் காதர், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை தளாளர் ஜாக்சன்அருள்,தலைமை ஆசிரியை ஜெபமாலை மேரி தலைமையில் பள்ள ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.


