திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவில் மாசித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மிக விமர்சையாக நடைபெற்றது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான வெயிலுகந்த அம்மன் கோவில் மாசித் திருவிழாகடந்த பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கிய இந்த மாசித் திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது. விழா காலங்களில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார். அதிகாலையில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
காலை 7:30 மணிக்குத் தேர் நிலையிலிருந்து புறப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ‘ஓம் சக்தி’ கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு வெளிவீதிகளிலும் பவனி வந்து மீண்டும் நிலையை அடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு டிஎஸ்பி மகேஷ்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


