தூத்துக்குடி எஸ்.ஏ.வி. மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் செயலாளர் சொர்ணலதா தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்டத் தொழில் மைய இணை இயக்குநர் சுவர்ணலதா முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் 75 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்திப் பேசினார்.
27-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரண்யா ராஜ்குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் பள்ளித் தலைமையாசிரியர் மாரியப்பன் மற்றும் முதுகலை ஆசிரியர் சுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர். இவ்விழாவில் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.


