நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டத்தில் இ-சேவை மையம் மற்றும் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம்” தமிழ்நாடு முதலமைச்சரால் 04.03.2024 அன்று துவக்கி வைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம், விளாத்திகுளம், சாத்தான்குளம், ஓட்டப்பிடாரம் ஆகிய வட்டங்களில் இந்த நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டத்தின் மூலம் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பொது மக்கள் இ-சேவை மையம் மற்றும் Citizen Portal (https://tamilnilam.tn.gov.in/citizen) வழியாக விண்ணப்பிக்கலாம்.அதனடிப்படையில் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் இணையவழியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நத்தம் பட்டா வழங்கப்படும். மேலும் கிராம நத்தம் பகுதிகளுக்கான நத்தம் மனை பட்டாக்களை https://eservices.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ‘நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம்” நடைமுறைப்படுத்தப்பட்ட வட்டங்களில் இ-சேவை மையம் மற்றும் Citizen Portal வாயிலாக பெறப்படும் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.


