தூத்துக்குடியில் தன்பாடு உப்பு மூடை சுமை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் கட்டிடத்தை மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்.
விழாவில் மேயர் பேசுகையில், “தூத்துக்குடி மாநகரின் பிரதானமான அடையாளமும் தொழிலுமான உப்பளத் தொழிலில் ஈடுபட்டுள்ள தூத்துக்குடி தன்பாடு உப்பு மூடை சுமை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் கட்டிடத்தை கலைஞரின் முரட்டு பக்தரும் எனது தந்தையாரும் சங்கத்தின் முன்னாள் பொது செயலாளருமான என்.பெரியசாமி நினைவாக அவரது பெயரில் என்.பெரியசாமி இல்லம் என்ற புதிய சங்க கட்டிடத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி என்று பேசினார்.
விழாவில் சங்கத் தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் ஆறுமுகநயினார், மாவட்ட பொருளாளர் சுசீ ரவீந்திரன், பொது குழு உறுப்பினர் கோட்டுராஜா, வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், தொமுச மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, நிர்வாகி ஏசுவடியான்,பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி செயலாளர் ரவீந்திரன், துணை தலைவர்கள் முருகன், தாத்தா சாமி, துணை செயலாளர்கள் ஹரி ராமன், பிரைட்டன், வட்ட பிரதிநிதி பாலரூபன், சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


