தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் கொண்டாடப்பட்டது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு வருடமும் தை முதல் நாளன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சமத்துவ பொங்கல் விழா நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் ஆட்சியர் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


