அம்மன்புரத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவங்கி வைத்தார்.
தமிழக அரசு அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.3 ஆயிரம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சீனி, முழுக்கரும்பு, வேட்டி மற்றும் சேலை வழங்க வழங்க உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அம்மன்புரத்தில் நேற்று பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடந்தது. ஆட்சியர் இளம்பகவத் தலைமை வகித்தர். ஆர்டிஓ கௌதம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பை வழங்கி பேசினார்.
இதில் தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் ராஜேஷ், தாசில்தார் (பொ) ரதிகலா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஜனகர், திருச்செந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் செங்குழி ரமேஷ், திருச்செந்தூர் நகர செயலாளர் வாள்சுடலை, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் செல்வக்குமார், துணை அமைப்பாளர் கிருபாகரன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுதாகர், வக்கீல் பாரிகண்ணன், முன்னாள் பஞ்., தலைவர் ஞானராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


