தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் குறள்சார்ந்த ஓவியப்போட்டி / குறள் ஒப்பித்தல் போட்டியில் பொதுமக்கள் மட்டும் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 31.12.2024ஆம் நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர்சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சியில் ஒவ்வோர் ஆண்டும் குறள்வாரம் கொண்டாடப்பட அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் மட்டும் கலந்து கொள்ளும் (பள்ளி / கல்லூரி மாணக்கர்கள் / அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் நீங்கலாக) குறள் சார்ந்த ஓவியப்போட்டி / குறள் ஒப்பித்தல் போட்டி 12.01.2026 அன்று தூத்துக்குடி, புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெறவுள்ளது.
பொதுமக்களுக்கான குறள் ஒப்புவித்தல் போட்டி12.01.2026 அன்று முற்பகல் 10.00 மணிக்கும், ஓவியப் போட்டி பிற்பகல் 02.00 மணிக்கும் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் பங்கேற்போர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் அவரவர் ஆதார் அட்டை அல்லது குடும்ப அட்டை நகலுடன் ஒருமணிநேரம் முன்னதாக போட்டி நடைபெறும் இடத்திற்கு வருகைப்புரிய வேண்டும்.
குறள் ஒப்பித்தல் போட்டியில் தரவரிசை அடிப்படையில் தெரிவுசெய்யப்படும் முதல் 5 பேர் ஒவ்வொருவருக்கும் ரூ, 5,000/- வீதமும், அடுத்த 5 பேர் ஒவ்வொருவருக்கும்ரூ. 3,000/- வீதமும் அடுத்த 5 பேர் ஒவ்வொருவருக்கும் ரூ. 2,000/- வீதமும் ஆக மொத்தம் பரிசுத்தொகை ரூ. 50,000/- மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும்.
ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ, 5,000/-மும் இரண்டாம் பரிசாகரூ. 3,000/-மும், மூன்றாம் பரிசாக ரூ. 2,000/-மும் ஆக மொத்தம் பரிசுத்தொகை ரூ. 10,000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
ஓவியப் போட்டியில் கலந்து கொள்பவர்கள் ஓவியம் வரைவதற்கு தேவையான வண்ணப்பென்சில்கள், கிரையான்கள் முதலிய பொருள்களை உடன் எடுத்துவர வேண்டும். பங்கேற்பாளர்களுக்கு ஓவியம் வரைவதற்கு தேவையானதாள் வழங்கப்படும்.
போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பொதுமக்கள் கீழ்க்குறிப்பிட்டுள்ள விரைவுத் துலங்கள் குறியீடு (QR Code வழியாக பதிவுசெய்து கொள்ளலாம் பதிவு செய்யாதவர்கள் தேர்வு மையத்திற்கு நேரடியாக வந்தும் பதிவுசெய்து தேர்வில் கலந்து கொள்ளலாம்.
மேலும் குறளாசியர் மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 09.01.2026 அன்று எழுத்து தேர்வு தூத்துக்குடி, புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


