நெல்லையில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் மனித நேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெரு விழா மற்றும் தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டமலம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாளை சாராள் தக்கர் கன்வென்சன் சென்டர் நுழைவாயில் திறப்பு விழா நெல்லை டக்கரம்மாள்புரம் தரிசன பூமியில் நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த விழாவில் ஸ்ரீமத் பரசமய கோளரிநாத ஆதினம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அவர் ஆதின மடத்தின் சார்பில் முதல்வரை வரவேற்று பொன்னாடை போர்த்தி முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய நெல்லை மாவட்ட வரலாறு நூலை பரிசாக அளித்தார். மேலும் அவர் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரச்சனை குறித்த மனுக்களை முதலமைச்சரிடம் வழங்கினார். அந்த மனுகளில் அவர் கூறியிருப்பதாவது.
தாங்கள் தமிழக மக்களுக்கு வேண்டிய உதவிகளை மிகச்சிறப்பாக செய்து வருகீறீர்கள். மிக்க நன்றி. தாமிரபரணி நதி வற்றாத ஜீவ நதி. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டத்தில் குடிதண்ணீரை பூர்த்தி செய்யும் நதி. இந்த நதியில் சமீப காலமாக சாக்கடை கலந்து குடிநீரை மாசுபடுத்தி வருகிறது.
தாங்கள் கடந்த முறை திருநெல்வேலி வருகை புரிந்த போது தாமிரபரணி நதியில் சாக்கடை கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க அறிவிப்பு கொடுத்தீர்கள். அதன் படி பணிகள் நடந்து வருகிறது. ஆனாலும் மிக வேகமாக இந்த பணிகளை துரிதப்படுத்த வேண்டும். திருநெல்வேலி மாநகராட்சியில் இருந்து 17 இடங்களில் கலக்கும் சாக்கடையையும், நெல்லை மாவட்டத்தில் விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கோபாலசமுத்திரம், பத்தமடை, உள்பட பேரூ£ட்சி மூலம் தாமிரபரணி துணை கால்வாயில் விழும் சாக்கடைகளையும் நிருத்தி, தாமிரபரணியை நல்லதொரு நதியாக மீட்டு தரவேண்டும். ஐந்து மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
தாமிரபரணி கரையில் உள்ள சுமார் 144 மண்டபங்கள் மற்றும் படித்துறைகளை பழமை மாறாமல் சீரமைத்து தரவேண்டும். தற்போது இந்த மண்டபங்கள் கட்டிடங்கள் உருவாக்குவது இயலாத காரியம்.
தமிழர்களின் தொன்மையையும் கலாச்சாரத்தையும் மீட்டு தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகம் போலவே, பொருநை (தாமிரபரணி )ஆற்றையும் மீட்டு, மண்டபங்கள் படித்துறைகளை சீரமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.
தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் , முத்தாலங்குறிச்சி எனும் கிராமத்தில் 1000 வருடம் பழமையான சிவகாமி சமேத வீரபாண்டீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆயலம் சுமார் 400 வருடங்களுக்கு முன்பு வந்த மழை வெள்ளத்தில் சிதிலமடைந்து விட்டது. அப்போது ஆண்ட மன்னன் மிகப்பிரமாண்டமான இந்த கோயிலை சிறிய அறைக்கும் கட்டி வைத்து விட்டு சென்று விட்டார். தற்போது இந்த கோயிலை பிரமாண்டமாக அமைக்க உள்ளூர் மக்கள் மற்றும் இந்து அறநிலையத்துறை ஏற்பாடு செய்து வருகிறது. இதற்காக மாவட்ட ஒப்புதல், மாநில ஒப்புதல் பெற்று திருப்பணிக்கு தயாராகி உள்ளது.
இந்த ஆலயத்தினை சுமார் 1 கோடி ரூபாயில் புரணமைக்க 16 வது நிதி ஆணைய தொகை வேண்டி அனுப்பப்பட்டுள்ளது.
தாங்கள் அந்த தொகையை உடனே வழங்க ஏற்பாடு செய்து, கோயில் திருப்பணியை துவக்கி வைக்க வேண்டுகிறேன். என்று கூறியிருந்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் ஆவண செய்வதாக வாக்களித்துள்ளார்.
ஆதினத்துடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு,கருணைக்கடல் அறக்கட்டளை கடையம் நயினார், நெல்லைகுமார், கல்லிடைகுறிச்சி முருகன்,கவிஞர் மூர்த்தி, பாளை ஆறுமுகம், மதுரை மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.


