கோவில்பட்டி எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் குறித்த விழிப்புணர்வு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியின் அம்சமாக, கோவை ஜெ.எஸ்.எஸ் கல்லூரியின் இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் துறை பேராசிரியர் சோபிகா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா குறித்த விழிப்புணர்வு உரைகளை வழங்கினர்.
மேலும் அவர் கூறுகையில் ஆரோக்கியமான மற்றும் தரமான தூக்கம் குறித்தும் ஆரோக்கியமான உணவு முறை குறித்தும் மாணவர்களுடன் கலந்துரையாற்றினார். அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது.
கருத்தரங்கில் ஜெ.எஸ்.எஸ் கல்லூரி மாணவி செல்வி. வார்சா உட்பட ஜெ.எஸ்.எஸ் கல்லூரியின் மாணவிகள் மற்றும் எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியின் மாணவர்-மாணவியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முன்னதாக ஆங்கிலத்துறையின் மூன்றாமாண்டு மாணவி கார்த்திகா வரவேற்றார். நிறைவாக ஆங்கிலத்துறையின் இரண்டாமாண்டு மாணவி லாவண்யா நன்றியுரை வழங்கினார்.


