ரஜினியின் நடிப்பும் ஆன்மீகமும் அவரை சூப்பர் ஸ்டாராக இன்று வரை நிலை நிறுத்தியுள்ளது என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்த் 75வது பிறந்தநாளை யொட்டி தெய்வீக தென்றல் ரஜினிகாந்த் நற்பனி மன்றம் சார்பில் சண்முகபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில், சிறப்பு விருந்தினராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தையல்மிஷின் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் அவர் பேசுகையில் “திரைப்படத்துறையில் 50ஆண்டுகாலம் நிறைவு செய்துள்ளதால் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ரசிகர் மன்றங்களாக இல்லாமல் அவரது பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது ரஜினிக்கு பெருமை சேர்க்கும் திரைப்பட துறையில் தனக்கென்று தனித்திறமையோடு நடித்து இன்று வரை சூப்பர் ஸ்டாராக திரைப்பட நடிகராக ஜொலித்து வருகிறார்.
இத்தோடு இல்லாமல் ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவர் அதற்கென்று செல்லும் போது யாரையும் தொந்தரவு செய்யாமல் தனக்கென்று தனி வழியில் நடந்து சென்று கடந்து செல்வார். ஆட்டம் பாட்டம் என்று இல்லாமல் அனைவருக்கும் நன்மை செய்யும் நற்பனி மன்றமாக தொடர்ந்து செயல்படவேண்டும். 75வது பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிகாந்த்துக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு இந்த விழாவை சிறப்பாக செய்த அனைவரையும் பாராட்டுகிறேன் என்று பேசினார்.
விழாவில் ஜெயபால் தலைமை வகித்தார். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், வட்டச்செயலாளர்கள் பொன்ராஜ், சுரேஷ் மகாராஜா, கவுன்சிலர் பாப்பாத்தி, முன்னாள் கவுன்சிலர் ஜெயசிங், பகுதி இளஞைர் அணி அமைப்பாளர் சூர்யா, வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், ஜெபக்குமார் ரவி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், ரஜினிமன்ற நிர்வாகி விஜயஆனந்த், மற்றும் மணி அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


