கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே மயங்கி விழுந்து டிரைவர் சாவு உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் பரங்கிநாதபுரம் வடக்கு 3-வது தெருவை சேர்ந்த சோலையப்பன் மகன் பாலசுப்பிரமணியன் (65). கார் டிரைவர். இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் முன்பு நடந்து சென்று கொண்டிருந்த இவர், திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிசை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


