நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் தலைமையில் பேராசிரியர்கள், மாணவ- மாணவியர்கள் “இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட குடிமக்களாகிய நாம், சுதந்திரமான, நியாயமான, அமைதியான தேர்தல்களின் மாண்பை நிலைநிறுத்துவோம் என்றும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி போன்ற எந்தவொரு பாகுபாடும் இன்றி அச்சமின்றி வாக்களிப்போம் என்றும் உறுதியளிக்கிறோம்” என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் நீதிபதி ஜான் சந்தோஷம் தலைமையில் முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் லிவிங்ஸ்டன் நவராஜ், உடற்கல்வி இயக்குநர் விமல் சுதாகர் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.


